திரைப் பெருங்கடல் என- அலை வீசுகின்ற பெருங்கடல் (தொடர்வது) போல; தொடர்ந்து பின் செல -(இராமனைப்) பின்பற்றித் தொடர்ந்து செல்ல; வரைப்புயத்து அண்ணல் - மலைபோன்றதோளை உடைய தலைவனாகிய இராமன்; உரைப்பதை உணர்கிலன் - (அவர்களுக்கு) ஆறுதல்சொல்வதை அறியாமலும்; ஒழிப்பது ஓர்கிலன் - (அவர்களை) வராமல் தடுப்பதுபற்றிஆராயாமலும்; தன் மனையை நோக்கினான் - தன் இல்லத்தை நோக்கிச் சென்றான். பின்பற்றி வருவாரைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் கூறி அகற்ற இயலாமல் இராமன் தன் மனைக்குச் சென்றான் என்பதாம். ‘உரைப்பதை’ என்பதற்கு அவர்கள்புலம்பிக் கூறுவதை உணராதவனாய் என உரைப்பினும் அமையும். 181 | 1787. | நல் நெடு நளிர் முடி சூட, நல் மணிப் பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன், துள் நெடுஞ் சீரையும் சுற்றி, மீண்டும், அப் பொன் நெடுந் தெருவிடைப் போதல் மேயினான். |
நல் நெடு நளிர் முடி சூட - சிறந்த பெரிய பெருமை உடைய மகுடத்தைச்சூடிக்கொள்ள; நல் மணிப் பொன் நெடுந் தேரொடும் பவனி போனவன் - நல்ல மணிகள்கட்டப்பெற்ற பொன்னால் ஆகிய பெரிய தேரின்மீது உலாச் சென்ற இராமன்; மீண்டும் - திரும்பவும்; அப் பொன் நெடுந் தெருவிடை - பொலிவுபெற்ற அதே பெருவீதியில்; துன் நெடுஞ் சீரையும் சுற்றி - நெருங்கிய பெரிய மரவுரியைச் சுற்றிக் கொண்டு; போதல் மேயினான் - போவதைப் பொருந்தினான். தேரொடு சென்றவன், சீரையொடு கொண்டு வந்தான் என்பது ஒரு சொல் நயம். இரண்டையும் இணைத்துக் காட்டி அவலத்தை மேலும் அதிகமாக்கினார் கம்பர்.‘கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன், மேற்றிசை வாயில் வறியேன் பெயர்க்கு’ (சிலப். 23:182 - 3) என்ற கண்ணகி நிலையை ஒப்பிடுக. 182 இராமனை வீதியில் கண்டார் உற்ற வருத்தம் | 1788. | அந்தணர், அருந் தவர், அவனி காவலர், நந்தல் இல் நகருளார், நாட்டுளார்கள், தம் சிந்தை என் புகல்வது? தேவர் உள்ளமும் வெந்தனர், மேல் வரும் உறுதி வேண்டலர்.* |
அருந்தணர்-; அருந்தவர் - அரிய முணிவர்கள்; அவனிகாவலர்- பூமிஅரசர்கள்; நந்தல் இல் நகருளார் - கெடுதலில்லாத அயோத்தி நகரில் உள்ளவர்கள்; நாட்டுளார்கள் - கோசல நாட்டில் உள்ளவர்கள்; தம் சிந்தை புகல்வது என்?- மனம்பட்ட துன்பத்தைச் சொல்வது எவ்வாறு; மேல்வரும் உறுதி வேண்டலர் - (இராமன்காடு |