| | இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை ஒருவனோ, இவற்கு இவ் ஊர் உறவு?’ என்றார் - சிலர் |
சிலர் -; ‘திரு அரை சுற்றிய சீரை ஆடையன் - அழகிய இடுப்பின்கண் கட்டிய மரவுரி உடையை உடையவனாய்; பொரு அருந்துயரினன் - ஒப்பற்ற பெரும் துன்பத்தோடு; தொடர்ந்து போகின்றான் - (இராமனைப் ) பின்பற்றித் துணையாகச் செல்கின்ற; இருவரைப் பயந்தவள் - (இலக்குமண சத்துருக்கனராகிய) இரு பிள்ளைகளைப் பெற்றசுமித்திரையானவள்; ஈன்ற - பெற்றெடுத்த; கான்முளை - மகனாகிய இலக்குவன்; ஒருவனோ? - ஒருவன் மட்டும்தானா?; இவற்கு இவ்ஊர் உறவு’ - இராமனுக்கு இந்தஊரில் உறவாக இருப்பவர் (வேறு யாரும் இலரோ);’ என்றார் -. தாம் இவ்வளவு பேர் இருக்கவும் இலக்குவன் மட்டு்மே பின் தொடர்ந்து, செல்வது கண்டு தம்மைத் தாமே நொந்துகொண்டவர் பேசிய பேச்சுஇது. 188 | 1794. | ‘முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை, மழுக்களின் பிளத்தும்’ என்று, ஓடுவார்; வழி ஒழுங்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து, இடர் உற்றார் - சிலர் | சிலர் -; “முழுக் கலின் வலிய நம் மூரி நெஞ்சினை - பெரிய கல்லைப் போலவலியதாக உள்ள நமது கடு மனத்தை; மழுக்களின் பிளத்தும்’ - கோடரியால்இரண்டாக்குவோம்;’ என்று ; ஓடுவார் - ஓடுகின்றார்கள்; வழி ஒழுக்கியகண்ணின் நீர்க் கலுழி ஆற்றிடை - வழியில் ஒழுகவிடப்பட்ட கண்ணீராகிய கலங்கியநீர்ப்பெருக்காகிய ஆற்றின்கண்; இழுக்கலில் - சேற்றில்; வழுக்கி வீழ்ந்து- சறுக்கி விழுந்து; இடர் உற்றார் - துன்பம் அடைந்தார். கலின் - கல்லின் என்பதன் விகாரம். மழு - கோடரி. ஒடுகின்றவர் தமது கண்ணீர் ஆற்றுச் சேற்றில் வழுக்கி, வீழ்ந்தார்கள் என்பதாம். இழுக்கல் - சேறு. “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்’ என்னும் குறள் காண்க. (குறள். 415.) 189 | 1795. | பொன் அணி, மணி அணி, மெய்யின் போக்கினர், மின் என மீன் என விளங்கும் மெய் விலைப் பல் நிறத் துகிலினைப் பறித்து நீக்கினர், சின்ன நுண் துகிலினைச் செறிக்கின்றார் - சிலர்.* | சிலர்-; மெய்யின் - தம் உடம்பிலிருந்து; பொன் அணி, மணி அணிபோக்கினர் - பொன்னாலும் மணியாலும் இயன்ற அணிகலன் |