பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 291

களைக் கழற்றி எறிந்தனராகி;  மின் என விளங்கும் மெய் - மின்னலைப்
போல விட்டுவிளங்கும் தமது  உடம்பில்; மீன் என விலைப் பல்நிறத்
துகிலினை
- விண்மீனைப்போன்ற சிறந்த விலை படைத்த பல நிறமுள்ள
உயர்ந்த ஆடைகளைப்;  பறித்து நீக்கினர் - பிடித்திழுத்து அப்பால் வீசி
எறிந்து;  சின்ன நுண்துகிலினைச் செறிக்கின்றார் -சிறிய நுண்ணிய
ஆடையை இறுகக் கட்டுகின்றார்.

     இராமன் அணிதுறந்து  மரவுரி கொண்டு செல்லும்போது  தமக்கு
அலங்யையும்,  மீன்என -ஆடையையும் குறித்ததாகக் கொள்க.       190

1796.‘நிறை மக உடையவர், நெறி செல் ஐம்பொறி
குறை மகக் குறையினும், கொடுப்பராம் உயிர்
முறை மகன் வனம் புக, மொழியைக் காக்கின்ற
இறைமகன் திருமனம் இரும்பு’ என்றார் - சிலர்.

     சிலர்-; ‘நிறை மக உடையவர் - பல பிள்ளைகளை உடையவர்கள்;
நெறி செல்ஐம்பொறி குறை -  மனத்தின் வழியில் செல்கின்ற
ஐம்பொறிகளில் ஒன்றிரண்டு குறைந்து ஊனமுற்ற;  மக - பிள்ளை;
குறையினும் - அழிந்தாலும்;  உயிர் கொடுப்பர் - தங்கள் உயிரைப்
போக்கிக்கொள்வர் (இது உலக வழக்கமாகவும்);  முறைமகன் வனம் புக-
அரச உரிமைக்கு  முறையாக உரிய மூத்த பிள்ளை காடு செல்ல;
மொழியைக் காக்கின்ற இறைமகன் - வாய்மையைக் காத்து  வரம்
கொடுத்துள்ள சக்கரவர்த்தியின்;  திருமனம்இரும்பு’ - அழகிய மனம்
இரும்பாகும்;’ என்றார் -

     குறை மக - ஊமை, செவிடு, குருடு முதலிய குறை உடைய பிள்ளை.
‘ஆம்’ உரையசை.                                             191

1797. வாங்கிய மருங்குலை வருத்தும் கொங்கையர்,
பூங்கொடி ஒதுங்குவபோல், ஒதுங்கினர்;
ஏங்கிய குரலினர்; இணைந்த காந்தளின்
தாங்கிய செங் கை தம் தலையின்மேல் உளார்.

     வாங்கிய மருங்குலை - உள்வாங்கிய மெலிந்து வளையும் இடையை;
வருத்தும்கொங்கையர்
- தமது  பாரத்தால் வருத்துகின்ற தனங்களை
உடைய அழகிய மகளிர்; பூங்கொடி ஒதுங்குவபோல் ஒதுங்கினர்
- மலர்
பூத்த கொடி அசைவது போல் ஒதுங்கி; ஏங்கிய குரலினர் - அழுத குரல்
உடையதாய்;  இணைந்த காந்தனின் - இரட்டையானகாந்தள் மலர்போல்;
செங்கை - சிவந்த கையை; தம் தலையின் மேல் தாங்கியஉளார் - தம்
தலைகளின் மேல் தாங்கியவராய் உள்ளனர்.