காமரம் கனிந்து என - காமரம் என்னும் பண் முற்றிப் பழுத்தாற்போல; கனிந்த மென் மொழி - இனிய மென்மையான பேச்சினை உடைய; மா மடந்தையர் எலாம் - பெருமயுற்ற மகளிர் எல்லாரும்; மறுகு சேர்தலால் - வீதியை அடைந்தபடியால்; தவளமாடம் - வெண்ணிற மாளிகைகள்; தே மரு நறுங்குழல் திருவின் நீங்கிய தாமரை ஒத்தன- தேன் பொருந்திய நறுமணம் வீசும் சுடர் தலை உடைய திருமகளை விட்டுப் பிரிந்த தாமரைமலர்போல் ஆயின. காமரம் என்பது பண் நிரம்பினாற் போன்ற பேச்சு. மகளிர் போனபடியால் வெறுமைஅடைந்த மாளிகையைத் திருமகள் நீங்கிய தாமரைபோல் என்றார். தவளம் - வெண்மை.“திருப்புறக் கொடுத்த செம்பொன் தாமரை போன்று கோயில், புரிக்குழல மடந்தை போகப் புலம்பொடு மடிந்த அன்றே” என்ற சிந்தாமணி (560) இங்கு ஒப்பு நோக்கற்குரியது. ‘ஏ’ காரம்ஈற்றசை. 197 | 1803. | மழைக் குலம் புரை குழல் விரிந்து மண் உற, குழைக் குல முகத்தியர் குழாம் கொண்டு ஏகினர் - இழைக் குலம் சிதறிட, ஏவுண்டு ஓய்வுறும் உழைக் குலம் உழைப்பன ஒத்து, ஓர் பால் எலாம். |
ஓர் பால் எலாம் - ஒரு பக்கத்தில் எல்லாம்; ஏ உண்டு - அம்பு பட்டு; ஒய்வுறும் - சோர்வடைந்து இறக்கும் நிலை எய்திய; உழைக்குலம் - மான்கூட்டம்; உழைப்பன ஒத்து - துடித்து வருந்துவன போல்; இழைக்குலம் சிதறிட- அணிகலன்கள் கீழே சிந்த; மழைக்குலம் புரை குழல் - மேகக் கூட்டம் ஒத்த கூந்தல்;விரிந்து மண் உற - அவிழ்ந்து தரையில் புரள; குழாம் கொண்டு - கூட்டமாகி; ஏகினார் - சென்றார்கள். தோடு எனப் பொருள் கூறினோம் ஆயினும் குழை என்பது தொங்கலாக இடப்பெற்ற காதணியைக்குறிக்கும். தோடு - செறித்த காதணியாம். கோடு - பனை யோலை, குழை - தளிர் என இவற்றை ஒப்பு நேரிக்கி அமைந்த பெயர்கள். 198 நகரின் பொலிவு அழிதல் | 1804. | கொடி அடங்கின மனைக் குன்றம்; கோ முரசு இடி அடங்கின; முழக்கு இழந்த பல் இயம்; படி அடங்கலும், நிமிர் பசுங் கண் மாரியால், பொடி அடங்கின, மதில் புறத்து வீதியே., |
மனைக்குன்றம் - மனைகளாகிய மலைகளில்; கொடி அடங்கின - கொடிகள் அடங்கிப் போயின; கோ முரசு- அரச முரசம்; இடி அடங்கின- ஒலித்தல்இல்லாமற் போயின; பல் இயம் - பல வாத்தியங்கள்; முழக்கு இழந்த - ஒலியைஇழந்தன; படி அடங்கலும் - பூமி |