முழுவதிலும்; மதில்புறத்து வீதி - மதிலின் புறம்பே உள்ள வீதிகள; நிமிர்பசுங்கண் மாரியால் - பெருகுகின்ற கண்ணீர் மழையால்; பொடி அடங்கின - புழுதிஅடங்கப் பெற்றன. கொடி கட்டப்பெற்ற மாடங்கள் கொடி இன்றி இருத்தல் வாத்தியங்கள் ஒலியாமை முதலியனதுயரச் சின்னங்களாம். அயோத்தியின் துயரத்தை உலகத்தின்மேல் ஏற்றிக் கூறியது உயர்வுநவிற்சியே; ஆயினும், உலகமே வேதனைப் படுதற்குரியநிகழ்ச்சிதானே! 199 | 1805. | அட்டிலும் இழந்தன புகை; அகிற் புகை நெட்டிலும் இழந்தன; நிறைந்த பால், கிளி வட்டிலும் இழந்தன; மகளிர் - கால் மணித் தொட்டிலும் இழந்தன, மகவும் - சோரவே. |
அட்டிலும் புகை இழந்தன - சமையற்கட்டுகள் (சமைத்தல் இல்லாமையால்) புகையைஇழந்தன; நெட்டிலும்- உயர்ந்த மேல் மாடங்கள்; அகில் புகை இழந்தன -(பெண்கள் கூந்தலைப் புகை செய்யாமையால்) அகில் புகைகளை இழந்தன; கிளி -கிளிகள்; பால் நிறைந்த வட்டிலும் இழந்தன- (ஊட்டுவார் இன்மையால்) பால்நிரம்பிய கிண்ணத்தை இழந்தன; மகளிர் சோர - தாய்மார்கள் துயரத்தால்சோர்ந்தபடியால்; மகவும் - பிள்ளைகளும்; கால் மணித் தொட்டிலும் இழந்தன - கால் உடைய மணிகள் அழத்திச் செய்யப்பெற்ற தொட்டிலை இழந்தன. துயர மிகுதியால் நகர் தொழில் மறந்தபடியைச் சொன்னார். நெடு(மை) + இல் =நெட்டில். 200 | 1806. | ஒளி துறந்தன முகம், உயிர் துறந்தென; துளி துறந்தன, முகில் தொகையும்; தூய நீர்த் தளி துறந்தன பரி; தான யானையும் களி துறந்தன, மலர்க் கள் உண் வண்டினே. |
உயிர் துறந்தென - உயிர் போனார் போல; முகம் - எல்லோருடையமுகமும்; ஒளி துறந்தன - ஒளி மழுங்கின; முகில் தொகையும் - மேகக்கூட்டமும்; துளி துறந்தன - மழைத் துளி துளிர்த்தலைக் கைவிட்டன; பரி -குதிரைகள்; தூய நீர்த் தளி துறந்தன- தூய்மையான நீர்ச் சாலைகளை இழந்தன; தானயானையும் - மதப் பெருக்கையுடைய யானைகளும்; மலர்க் கள் உண் வண்டின் - மலரில் தேன் உண்ணும் வண்டைப் போல; களி துறந்தன - களித்தலைக் கை விட்டன. தளி - கூடம். வண்டுகள் தேன் உண்டால் களிக்கும். இங்கே வண்டுகள் களிதுறந்தன என்றதால்இராமன் காடு ஏகும் துயரத்தால் மலர்களில் தேன் இல்லையாயிற்று. 201 |