அரச வீதி - அரசர்களுக்குரிய வீதிகள்; முழவு எழும் ஒலி இல - தண்ணுமையிலிருந்து உண்டாகும் ஒலிகள் இல; முறையின் - இசை முறைப்படி; யாழ் நரம்புஎழ - யாழின் கண் நரம்பு எழுப்ப; எழும் ஒலி இல - எழுகின்ற ஒலிகள் இல; இமைப்பு இல் கண்ணினர் - இமையாக் கண்ணினராய தேவர்களது; விழவு -விழாவிற்காக; எழும் ஒலி இல - உண்டாகின்ற ஒலிகளும் இல; அழ எழும் ஒலி அலது வேறும் ஒன்று இல - அழுவதனால் உண்டாகின்ற கூக்குரல் ஓசை அல்லாமல் வேறு ஓர் ஒலிஇலவாயின. முழவு - மத்தளம். தண்ணுமை குடமுழா என்பன ஒரு நிகரன. முறை என்பது பண்ணாகும்.தேவர்களுக்குச் செய்யும் திருவிழாக்களும் நின்று போயின. கேட்க வேண்டிய ஓசைகள்கேட்கவில்லை; கேட்கத் தகாத ஓசை மட்டுமே கேட்டது. 204 | 1810. | தெள் ஒளிச் சிலம்புகள் சிலம்பு பொன் மனை நள் ஒலித்தில; நளிர் கலையும் அன்னவே; புள் ஒலித்தில, புனல்; பொழிலும் அன்னவே; கள் ஒலித்தில, மலர்; களிறும் அன்னவே.* |
தென் ஒலிச் சிலம்புகள் சிலம்பு பொன்மனை - தெளிந்த ஒலியையுடைய காற்சிலம்புகள் இடையறாது ஒலிக்கின்ற அழகிய வீடுகள் (இப்போது); நள் ஒலித்தில -நள்ளென்ற ஓசை உடையவாய் ஒலிக்கவில்லை; நளிர் - செறிந்த; கலையும் அன்ன- மேகலை அணிகளும் ஒலிக்கா ஆயின; புனல் - நீரில்; புள் ஒலித்தில -பறவைகள் ஒலிக்கவில்லை; பொழிலும் - சோலைகளும்; அன்ன - அதுபோலப் புள் ஒலிக்கா ஆயின; மலர் - பூக்களில்; கள் - வண்டுகள் ஒலித்தில; களிறும்- யானைகளும் (மதநீர் படாமையால்); அன்ன - அதுபோல வண்டுகள் ஒலிக்காவாயின. சிலம்பு, மேகலை அணிவாரும் இயங்குவாரும் இல்லை. பறவைகள் அடங்கின. வண்டுகளும்ஓடுங்கின என்றார். ‘ஏ’ காரங்கள் அசை. 205 | 1811. | செய்ம் மறந்தன புனல்; சிவந்த வாய்ச்சியர் கைம் மறந்தன, பசுங் குழவி; காந்து எரி நெய்ம் மறந்தன; நெறி அறிஞர் யாவரும் மெய்ம் மறந்தனர்; ஒலி மறந்த, வேதமே. |
புனல் - நீரை; செய்ம் மறந்தன - வயல்களை மறந்து விட்டன; பசுங்குழவி - இளங் குழந்தைகளை; சிவந்த வாய்ச்சியர் கை - சிவந்த வாயுடையதாய் மகளிர் கைகள்; மறந்தன்- மறந்து போயின; காந்து எரி- விளங்கும்வேள்வித் தீ; நெய்ம் மறந்தன - நெய்யை மறந்து போயின; நெறி அறிஞர் யாவரும்- சாத்திரம் அறிந்த ஞானிகள் |