பக்கம் எண் :

298அயோத்தியா காண்டம்

அனைவரும்; மெய்- தத்துவப் பொருளை; மறந்தனர்-மறந்து போயினர்;
வேதம்-, ஒலி மறந்த- ஒலித்தலை மறந்து போயின.

     வயலுக்கு நீர் பாய்ச்சுவார் இல்லை. குழந்தைகள் பால் உண்ணவில்லை.
வேள்விகள் நடைபெறவில்லை. சாத்திர விசாரணை செய்வாரில்லை.
வேதபாராயணங்கள் நடைபெறவில்லை என்பதாம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 206

1812.ஆடினர் அழுதனர்; அழுத ஏழ் இசை
பாடினர் அழுதனர்; பரிந்த கோதையர்,
டினர் அழுதனர்; உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் - குழாம் குழாம்கொடே.

     குழாம் குழாம் கொடு-கூட்டம் கூட்டமாகத் திரண்டு; ஆடினர்-
நடனம்ஆடிக் கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-; அமுத ஏழ் இசை-
அமுதம் போன்ற இனியஏழு சுரங்களை;பாடினர் அமுதனர்-
பாடிக்கொண்டிருந்தவர்கள் அழுதனர்;பரிந்தகோதையர் ஊடினர்-
அறுத்து வீசிய மாலையராய் ஊடிக்கொண்டிருந்தவர்கள்;அழுதனர்-;
உயிரின் அன்பரைக் கூடினர்-
உயிர்போலச் சிறந்த காதலரைக் கூடிய
மகளிர்; அழுதனர்-.

     வெவ்வேறு இன்பமான தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள்
அத்தொழிலைக் கைவிட்டு அழுதனர்என்பதாம். ‘ஏ’ ஈற்றசை.       207

1813.நீட்டில, களிறு கை நீரின்; வாய் புதல்
பூட்டில, புரவிகள்; புள்ளும், பார்ப்பினுக்கு
ட்டில இரை; புனிற்று ஈன்ற கன்றையும்
ட்டில, கறவை; நைந்து உருகிச் சோர்ந்தவே.

     களிறு- யானைகள்; நீரின்- நீரில்; கை நீட்டில-துதிக்கையை
நீட்டவில்லை; புரவிகள்- குதிரைகள்; வாய்- வாயில்; புதல்- புல்;
பூட்டில- பூட்டப்பெறவில்லை;புள்ளும்- பறவைகளும்; பார்ப்பினுக்கு-
தம் குஞ்சுகளுக்கு;இரை ஊட்டில- இரை உண்பிக்கவில்லை;கறவை-
பசுக்கள்;புனிற்று- ஈன்றணிமையான; ஈன்ற கன்றையும்- தாம்பெற்ற
கன்றையும்;ஊட்டில-பால் ஊட்ட விடவில்லை;நைந்து உருகிச்
சோர்ந்த-
தேய்ந்து இரங்கிச் சோர்ந்தன.

     யானைகள் நீர்உண்ணவில்லை என்பதை துதிக்கையைப் புனலின்
நீட்டில என்றார். புதல்-புல். புல், கொள் நிறைந்த பையினைக் குதிரை
வாயில் மாட்டித் தின்னச் செய்வது வழக்கம்.ஆதலின், ‘புதல் பூட்டில’
என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை.                                  208

1814.மாந்தர்தம் மொய்ம்பினின், மகளிர் கொங்கை ஆம்
ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின,