பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 299

  சாந்தம்; அம் மகிழ்நர்தம் முடியின், தையலார்
கூந்தலும் வறுமையை மலரின் கூலமே.*

     மாந்தர்தம் மொய்ம்பினின் - ஆடவர்களது  வலிய தோளில்;
சாந்தம் -பூசப்பெற்ற சந்தனத்தை; மகளிர் கொங்கை ஆம் ஏந்து
இளநீர்களும் -
பெண்களது தனங்களாகிய உயர்ந்துள்ள  இளநீர்களும்;
வறுமை எய்தின - இல்லாமை அடைந்தன; அம் மகிழ்நர்தம் முடியின்-
அவ் ஆடவர்களது முடியில் உள்ள; மலரின்கூலம் -பூக்களின் திரட்சியை;
தையலார் கூந்தலும் - மகளிரது  கூந்தலும்; வறுமைய -இல்லாமை
அடைந்தன.

     ஆடவர் தோளில் பூசப்பெற்ற சந்தனம் மகளிர் கொங்கையைச்
சென்றடையும்.  இங்கே ஆடவர்சந்தனம்  பூசாமையாலும்  மகளிரைத்
தழுவாமையாலும் மகளிர் கொங்கை சந்தனம் பெறாது வறுமை எய்தினவாம்.
ஆடவர்தம் தலைமுடியில் உள்ள மலர்,  கூட்டத்தால்  மகளிர் கூந்தலைச்
சென்றடையும்.  இங்கே ஆடவர்  மலர் சூடாமையாலும்,  மகளிரைக்
கூடாமையாலும் மகளிர் கூந்தல்மலர் வறுமை அடைந்தனவாம். ‘ஏ’
ஈற்றசை.                                                    209

கலித்துறை  

1815.ஓடை நல் அணி முனிந்தன.
     உயர் களிறு; உச்சிக்
சூடை நல் அணி முனிந்தன,
     தொடர் மனை; கொடியின்
ஆடை நல் அணி முனிந்தன,
     அம் பொன் செய் இஞ்சி;
பேடை நல் அணி முனிந்தன.
     மென் நடைப் புறவம்.

     உயர்களிறு - பெரிய யானைகள்; ஓடை நல் அணி முனிந்தன -
முகபடாம்ஆகிய நல் அணியை வெறுத்தன; தொடர்மனை - வரிசையான
மாளிகைகள்; உச்சிச் சூடைநல்லணி முனிந்தன - தம் சிகரத்தில்
அணிதற்குரிய சூடா  என்னும் நல்லணிகளை அணியாமல்வெறுத்தன;
அம்பொன் செய் இஞ்சி - அழகிய பொன்னாற் செய்த மதில்கள்;
கொடியின் ஆடை நல் அணி முனிந்தன - கொடிச் சீலை ஆகிய நல்ல
அழகினை வெறுத்தன; மென் நடைப் புறவம் - மென்மையான
நடையினையுடைய புறாக்கள்; பேடை நல்லணி முனிந்தன- பேடையொடு
கூடிய நல்ல அணியை வெறுத்தன.

     ‘முனிந்தன’ என்பது இங்கே புனையாமையைக் குறித்ததாம். யானைகள்
முகபடாம் அணிந்துஅலங்கரிக்கப் பெறவில்லை. மாளிகையின் கோபுர
உச்சிகள் அழகு செய்யப் பெறவில்லை.மதில்களில் கொடிச் சிலை இல்லை.
புறாவும் பெடையும் கூடி அணையும் அழகு இல்லை என்பதாம்.       210