பக்கம் எண் :

302அயோத்தியா காண்டம்

படிந்த உடம்பு உடையவராய்; புடை வந்து  பொரும - பக்கத்தில் வந்து
விம்மியழ;  பழுது சீரையின் உடையினன் - அழகற்ற  மரவுரி  உடை
உடையவனாய்; வரும்படி -(இராமன்) வரும்தன்மையை; பாரா - பார்த்து;
எழுது பாவை அன்னாள் -சித்திரத்தில் எழுதப் பெற்ற பாவையை ஒத்த
சீதை;  துணுக்கமொடு - மனத்தில்வெருவுதலுடனே;  எழுந்தாள் -.

     இதுகாறும்  காணாததும்  எதிர்பாராததுமான காட்சியைக் கண்டாள்
ஆதலின, சீதைக்குத்திடுக்கீடு  நிகழ்ந்தது.                         214

சீதை இராமனை வினாவுதல்  

1820.எழுந்த நங்கையை, மாமியர்
     தழுவினர்; ஏங்கிப்
பொழிந்த உண் கண் நீர்ப்
     புதுப் புனல் ஆட்டினர்; புலம்ப,
அழிந்த சிந்தையள் அன்னம்,
     ‘ஈது இன்னது’ என்று அறியாள்;
வழிந்த நீர் நெடுங் கண்ணினள்,
     வள்ளலை நோக்கி,

     எழுந்த நங்கையை - (கணவனை நோக்கி) எழுந்த சீதையை;
மாமியர் -;  தழுவினர் - தழுவிக்கொண்டு;  ஏங்கி - அவலித்து;
பொழிந்த உண்கண்  நீர்ப்புதுப்புனல் ஆட்டி - சிந்திய மையுண்ட
கண்களிலிருந்து வரும் நீராகிய புதிய நீரில்நீராட்டி;  புலம்ப - வருந்த;
அழிந்த சிந்தையள் அன்னம் - அதனால்கெட்டழிந்த  மனம்
உடையளாய சீதை; ஈது இன்னது என்று அறியாள் - இதற்குக்காரணம்
இன்னது  என்று  அறியாதவளாய்;  வழிந்த நீர் நெடுங் கண்ணினள் -
வழிகின்ற நீரினை  உடைய நீண்ட கண்களோடு;  வள்ளலை நோக்கி -
இராமனைப் பார்த்து,

     இதுகாறும் அழுகையை  அறியாதவர் அழுத கண்ணீராதலின
‘புதுப்புனல்’ என்றார்.  இது குளகச்செய்யுள்.                       215

கலிவிருத்தம்  

1821.‘பொன்னை உற்ற
     பொலங் கழலோய்! புகழ் -
மன்னை உற்றது உண்டோ,
     மற்று இவ் வன் துயர்
என்னை உற்றது? இயம்பு’
     என்று இயம்பினாள் -