பக்கம் எண் :

304அயோத்தியா காண்டம்

     (அது கேட்ட சீதை) நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்-
தன் கணவன் இராமன்காடு செல்லப்போகிறான் என்றும்;  மேய மண்
இழந்தான் என்றும் -
தனக்குரிமையாகப்பொருந்திய இராச்சியத்தை
இழந்துவிட்டான் என்றும் (கருதி);  விம்மலள் -வருந்தினாள் அல்லள்;
‘யான் நீங்குவென்,  நீ வருந்தலை’ என்ற  தீய வெஞ்சொல் -யான்
காடு செல்வேன் நீ வருத்தமுறாதே என்று சொல்லிய மிகக் கொடிய சொல்;
செவி சுடத்தேம்புவாள் - தன் காதுகளைச் சுட்டெரிக்க அதனால்
வாடுவாள் ஆனாள்.

     அவன் இழப்புக்கு வருந்தாமல்,  அவனைத் தான் பிரியும் பிரிவுக்கும்,
அதனால் வருந்தாதேஎன்று சொல்லிய சொல்லுக்குமே வருந்தினாள்
என்பதாம். எந்நிலையிலும் அவனைப் பிரியாமையேஅவள் கருத்தாம்.
தன்னைப் பிரிவதில் அவன் கவலை  உறவில்லையே  என்பதும் அவள்
ஏக்கமாகும்.                                                  218

1824.‘துறந்து போம்’ எனச் சொற்ற சொல் தேறுமோ -
உறைந்த பாற்கடற் சேக்கை உடன் ஓரீஇ,
அறம் திறம்பும் என்று ஐயன் அயோத்தியில்
பிறந்த பின்பும், பிரியலள் ஆயினாள்?

     (நாமும் உடன் அவதரிக்காவிட்டால்) ‘அறம் திறம்பும்’ என்று -
தருமம் நிலைகெடுமே என்று கருதி; உறைந்த பாற்கடல் சேக்கை தாம்-
வசித்த பாற்கடலில் உள்ளஆதிசேடனாகிய படுக்கையை;  உடன் ஓரீஇ -
ஒன்றாக விட்டு நீங்கி; ஐயன்-திருமால்; அயோத்தியில் பிறந்தபின்பும் -
அயோத்தியில் அவதரித்த பிறகும்;  பிரியலள் ஆயினாள் - அவனைப்
பிரியாது உடன் உறைய வந்தவள் ஆகிய சீதை; துறந்துபோம் எனச்
சொற்ற சொல் -
தன்னைப் பிரிந்து விட்டுப் போவேன்’ எனப்
பொருள்படுமாறுஅவன் சொன்ன சொல் கேட்டு;  தேறுமோ? -
ஆற்றவளோ?

     ஐயன் மட்டும் அவதாரம் செய்தால் ‘அறம் திறம்பும்’ என்று  கருதி,
அதற்காகவே  தானும்உடன் அவதரித்தவள்,  இப்போது  பிரிவதைத்
தாங்க இசைவளோ?                                           219

1825.அன்ன தன்மையள், ‘ஐயனும், அன்னையும்,
சொன்ன செய்யத் துணிந்தது தூயதே;
என்னை, என்னை, “இருத்தி” என்றான்?’ எனா,
உன்ன, உன்ன, உயிர் உமிழா நின்றாள்.

     அன்ன தன்மையள் - அத்தகைய இயல்பினை உடைய சிதை;
‘ஐயனும் அன்னையும்சொன்ன- தந்தையும் தாயும் இட்ட கட்டளைகளை;
செய்யத் துணிந்தது  தூயதே -நடந்த முடிவு செய்தது  தூய்மை 
உடையதே (ஆயினும்);  என்னை-;  என்னை இருத்தி  என்றான்?’-
எதனால் அரண்மனையிலேயே  இரு என்று  சொன்னான்;