பக்கம் எண் :

நகர் நீங்கு படலம் 305

எனா -என்று;  உன்னி உன்னி - நினைத்து  நினைத்து; உயிர் உமிழா
நின்றாள் -
உயிர் துடிப்ப இருந்தாள்.

     குரவர் சொல் கேட்டல் அறமே ஆயினும் கொண்ட மனைவியைப்
பிரிதல் எதனால்  என்றுஅறியாது  வருந்துவன் ஆயினாள்.
பாற்கடலிலிருந்து  பிரியாமல் அயோத்தி வரை  உடன்வந்தவள்,
அயோத்தியிலிருந்து அருகில் உள்ள வனம் போகாமல் தடுக்கப்பெறுவது
கண்டுவருந்தினாளாம்.                                         220

இராமன் ‘இருத்தி’ என்றதன் காரணம்  கூறல்  

1826.‘வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து,
அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க்
கல் அரக்கும் கடுமைய அல்லல - நின்
சில் அரக்குண்ட சேவடிப் போது’ என்றான்.

     (இராமன்) ‘நின் - (சீதையே!)  உனது;  சில் அரக்கு உண்ட -
குளிர்ந்தசெம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற;  சேவடிப் போது - சிவந்த
அடிமலர்கள்;  வல்அரக்கரின் - கொடிய அரக்கர் போலத் (தோன்றும்);
மால் வரை - பெரியமலையில்; போய் விழுந்து - சென்று  பரவி; அல்-
இரவிலும்;  அரக்கின்  உருக்கு அழல் காட்டு அதர் - அரக்கினை
உருக்கினாற்போல வெப்பத்தைச்செய்கின்ற காட்டு வழியில் உள்ள; கல் -
கற்கள்;  அரக்கும் -உராய்கின்ற;  கடுமைய அல்ல’ - கடுமையுடையன
அல்ல;’  என்றான் -.

     மலைவழி,  காட்டுவழி,  இரவிலும் வெப்பம் செய்யும் வழி,  கூரிய
கற்கள் உற்ற வழி எனவேவெப்பமான - கூர்ங்கற்கள் உராய்வதனால்
ஏற்படும் வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன் பாதம்;
குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய மலரனைய பாதம்.
அதனால்தான்.‘இருத்தி’ என்றேனே அன்றி  உன்னைப்  பிரிதல்
வல்லமையால் சொன்னேன் என்று  கருதாதேஎன்பது  போல இராமன்
கூறினான்.                                                   221

சீதை தன் மன ஆற்றலை உரைத்தல்  

1827.‘பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு, நின்
பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?’ என்றாள்.

     ‘பரிவு இகந்த மனத்து  ஒரு பற்று  இலாது - இரக்கம் அற்ற
மனத்தில் ஒரு சிறிதும்விருப்பம் இல்லாமல்;  ஒருவுகின்றனை - என்னை
விட்டு விலகிச் செல்கின்றாய்;  ஊழி அருக்கனும் - பிரளய காலத்துச்
சூரியனும்;  எரியும்  என்பது - கடுவான்என்பது;  யாண்டையது? -
எவ்விடத்துள்ளது?  ஈண்டு -  இவ்விடத்து  (என்திறத்தில்);