நின் பிரிவினும் -உன் பிரிவு சுடுவதைக் காட்டிலும்; பெருங்காடு - உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு; சுடுமோ?’ - என்னைச் சுடுமோ;’ என்றாள் -. உன்னால் வரும் பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும்நிகராகாது; எனவே, ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்றாள். ‘பெருங்காடு இன்னாஎன்றீராயின். இனியவோ பெரும தமியேற்கு மனையே’ (குறுந். 124) என்பதும் காண்க. 222 1828. | அண்ணல், அன்ன சொல் கேட்டனன்; அன்றியும், உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்; கண்ணின் நீர்க் கடல் கைவிட நேர்கிலன், எண்ணுகின்றனன், என் செயற்பாற்று?’ எனா, |
அண்ணல் - இராமன்; அன்ன சொல் கேட்டனன் - அவள் சொன்ன அத்தகையவார்த்தையைக் கேட்டான்; அன்றியும் - அதன் மேலும்; உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் - அவள் மனத்தில் தலை எடுத்த நினைவையும் உணர்ந்துகொண்டான்; கண்ணின்நீர்க்கடல்- உடன்படாதவனாய்; ‘என்செயற்பாற்று’ எனா - செய்தற்குத்தகுதியானது யாது என்று; எண்ணுகின்றனன் - சிந்திப்பானானான். ‘அயோத்தியில் உள்ள கண்ணீர்க் கடலின் இடையே அவளைக் கைவிட உடன்படாது’ என்றும்பொருள் கூறலாம். சொல்லும் சிந்தனையும் ஒன்றாக இருப்பது உணர்ந்து சிந்திப்பான் ஆயினன்இராமன். 223 சீதை மரவுரி அணிந்து இராமன்பால் வந்து நிற்றல் 1829. | அனைய வேலை, அக மனை எய்தினள்; புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்; நினைவின், வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்- பனையின் நீள் கரம் பற்றிய கையினாள். |
அனைய வேலை - அப்பொழுது; அகமனை எய்தினள் - மாளிகைக்குள்ளேசென்றாள்; புனையும் சீரம் - உடுத்தற்குரிய மரவுரியை; துணிந்து - (செய்யத்தக்கது இதுதான் என எண்ணி) உறுதிசெய்துகொண்டு; புனைந்தனள் - உடுத்திக் கொண்டு; நினைவின் - உடன் போம் கருத்தோடு; வள்ளல் பின் வந்து - இராமனுக்குப்பின்புறமாக வந்து; அயல் - அருகிலே; பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் - பனைபோன்று நீண்ட இராமனது கையைப் பற்றிக் கொண்ட செயலினளாய்; நின்றனள்- |