|   | இரதம் நின்று இழிந்து, பின், இராமன், இன்புறும் உரை செறி முனிவரோடு உறையும் காலையே.  |  
      இராமன் -;  திருநகர்க்கு - அயோத்திக்கு;  ஓசனை இரண்டு விரைவின் சென்று -இரண்டு யோசனை தூரம் வேகமாகச் சென்று; ஒரு விரைசெறி சோலையை - மணம்பொருந்திய ஒரு சோலையை; எய்தினான் - அடைந்து;  இரதன் நின்று  இழிந்து -தேரிலிருந்து இறங்கி;  பின் - பிறகு;  இன்புறும் - தன் வரவால் மகிழ்ச்சிஅடைகின்ற; உரை செறி முனிவரோடு - மந்திரவுரையால் நிறைந்த முனிவர்களோடு; உறையும் காலை - தங்கியிருக்கும் நேரத்தில்.      உரை செறி-புகழ் மிகுந்த என்றும் ஆம். அடுத்த பாட்டில்முடியும்.  7 நகர மாந்தர் அங்கங்கே சோலையில் தங்கல்   | 1847. | வட்டம்     ஓர் ஓசனை வளைவிற்றாய், நடு எள்தனை இடவும் ஒர் இடம் இலாவகை, புள் தகு சோலையின் புறத்துப் போர்த்தென விட்டது - குரிசிலை விடாத சேனையே.  |  
      குரிசிலை விடாத சேனை - இராமனை விடாது  அவனைப் பின் பற்றிச் சென்றசேனையானது; ஓர் ஓசனை வட்டம் வளைவிற்றாய் - ஓர் ஓசனை தூரம் உள்ள வட்ட வடிவாகக்சூழ்ந்து; நடு - இடையில்; எள்தனை இடவும் - எள்ளை இட வேண்டும் என்றாலும்;  ஓர் இடம் இலாவகை -  ஒரு சிறிதும் இடம் இல்லாதபடி; புள்தகுசோலையின் புறத்து - பறவைகள் தங்குதற்குத் தக்க சோலையின் புறத்து; போர்த்து என- மூடிக் கொண்டது போல;  விட்டது - தங்கி அமைந்தது.      இராமனைச் சூழ்ந்து வட்டமாக உடன் சென்றோர் இடைவெளி இன்றித் தங்கினர் என்பதாம்.எள்ளைக் கூறினார் துன்பத்தின்கண் நிகழ்வதாகலின்.  இராமன் பிரிவு,  தசரதன் இறப்பு ஆகியனமுன்னும் பின்னும் உள்ள துக்க நிகழ்ச்சி ஆதலின் அவற்றின் தாக்கம் கவிஞனுக்கு எள்ளைக்கொண்டு வந்தது  என்க. ‘புள் தகு - புள் தங்கு’ ‘தங்கு’ என்பது இடைக்குறை ‘தகு’ என்று நின்றது எனலும் ஆம்.  ‘எண் என்னும் சொல் ‘எள்’ என நின்றது. “வேற்றுமை அல்வழி எண் என் உணவுப்பெயர்” (தொல்.  எழுத்து .  புள்ளி) ‘ஏ’ ஈற்றசை.                            8 | 1848. |     குயின்றன குலமணி நதியின் கூலத்தில், பயின்று உயர் வாலுகப் பரப்பில், பைம் புலில், வயின்தொறும் வயின்தொறும் வைகினர்; ஒன்றும் அயின்றிலர்; துயின்றிலர்; அழுது விம்மினார். |  
      (இராமனுடன் சென்ற அவர்கள்) ஒன்றும் - ஒரு பொருளையும்; வாய்மடுத்து - வாயில் இட்டு;   அயின்றிலர் - உண்ணவில்லை;  |