பக்கம் எண் :

326அயோத்தியா காண்டம்

     இராமன் திரும்பி வருபவனாகத் தோன்ற வில்லை யாதலின் சுமந்திரன்
வருத்தம்பெரிதாயிற்று.  பன்னுதல் - ஒன்றையே  திரும்பத் திரும்பச்
சொல்லுதல்.                                                 25

     துயர் மிகுதியுற்ற சுமந்திரனை இராமன் எடுத்து அணைத்துப் பேசுதல்  

1865.தடக் கையால் எடுத்து,
     அவன் - தழுவி, கண்ண நீர்
துடைத்து, வேறு இருத்தி,
     மற்று இனைய சொல்லினான் -
அடக்கும் ஐம் பொறியொடு
     கரணத்து அப்புறம்
கடக்கும் வால் உணர்வினுக்கு
     அணுகும் காட்சியான்.

     அடக்கும்  ஐம்பொறியோடு - (புலன்வழிச் செல்லாது) அடக்கிய
ஐம்பொறிகளோடு;கரணத்து அப்புறம் - அந்தக்கரணமாகிய மன
முதலியவற்றுக்கு அப்பால்;  கடக்கும் -கடந்து செல்கின்ற;  வால்
உணர்வினுக்கு -
தூய மெய்ஞ்ஞானத்துக்கு;  அணுகும் காட்சியான் -
நெருங்கிப் புலனாகின்ற தோற்றம் உடைய பரம்பொருளாகிய இராமன்; 
அவன் - அந்தச் சுமந்திரனை;  தடக்கையால் எடுத்து - (தனது) பெரிய
கைகளினால்தூக்கி;  தழுவி  -; கண்ணநீர் - கண்ணிலிருந்து வரும் நீரை;
துடைத்து  -;  வேறுஇருத்தி - தனியாக இருக்கவைத்து;  இனைய -
இத்தகைய (பின்வரும்) சொற்களை;  சொல்லினான் - சொன்னான்.

     பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டு அந்தக்கரணங்களையும் கடந்து நிற்பவனாய் யோகிகளின் மெய்யுணர்வுக்கே புலப்படுபவனாய் உள்ளவன் பரம்பொருள் என்பது கூறப்பட்டது. வனவாசத்தை ஒப்புக்கொள்ளாத கருத்தினன் சுமந்திரன் ஆதலால், அவனை இசைவித்துத் திருப்பி அனுப்பவேண்டித் தனியே அழைத்துச் சென்று பேசினான் இராமன் என்க. 26

1866.‘பிறத்தல் ஒன்று உற்றபின் பெறுவ யாவையும்
திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய்!
புறத்துறு பெறும் பழி பொது இன்று எய்தலும்,
அறத்தினை மறத்தியோ, அவலம் உண்டு எனா?

     ‘பிறத்தல் என்று உற்ற பின் - இவ்வுலகில் பிறந்தாயிற்று  என்ற
பிறகு; பெறுவ யாவையும்- நேரக்கடவ இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும்;
திறத்துளி - அவ்வவற்றின் கூறுபாட்டோடே; உணர்வது  ஓர் -
அறிகின்றதாகிய ஒப்பற்ற;  செம்மைஉள்ளத்தாய்! - நேர்மையான மனம்
உடைய சுமந்திரனே;  அவலம் உண்டெனா  -துன்பம்