பக்கம் எண் :

328அயோத்தியா காண்டம்

இழப்ப எய்தினும் -செல்வம் எல்லாம் இழக்கும்படி நேர்ந்தாலும்;  அறம்
துறப்பிலர்-
அறத்தைக்கைவிடாதவர்; எனல்- எனச் சொல்லப் பெறுவதே
ஆகும்.’

      போரில் படை ஏற்பது சூரத்தனம் அன்று. வாழ்வில் அறத்தின் வழி
மனம் தளராது நிற்றலே யாரும் என்றார்., ‘சிதைவிடத்து ஒல்கால் உரவோர்’
(குறள். 597.) காண்க. ‘அரோ’ , ‘ஏ’ அசைகள்.                       29

1869.‘கான்புறம் சேறலில்
     அருமை காண்டலால்,
வான் பிறங்கிய புகழ்
     மன்னர் தொல் குலம்,
யான் பிறந்து, அறத்தினின்று
     இழுக்கிற்று என்னவோ?-
ஊன் திறந்து உயிர் குடித்து
     உழலும் வேலினாய்!

     ‘ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய்! - (பகைவரது)
உடலைத் திறந்துஉயிரைக் குடித்துத் திரியும் வேலை உடையவனே!; கான்
புறம் சேறலில் அருமை காண்டலால் -
காட்டின் புறத்தே செல்லுதலால்
உண்டாகும்  அருமையை (துன்பத்தை)  நினைத்து  (நான்)திரும்புதலால்;
வான் பிறங்கிய புகழ் மன்னர் தொல் குலம் - வானளாவிய புகழ் பெற்ற
மன்னர்களாற் சிறந்த பழைமையான நம் குலம்;  யான் பிறந்து
அறத்தினின்று  இழக்கிற்று -
யான் பிறந்த படியால் அறத்திலிருந்து
தவறியது;  என்னவோ?’ - என்று எல்லாராலும்சொல்லப்படவோ.’

      வனவாசத்தின் அருமை கருதித் திரும்பினால் பழி வரும், புகழ்
கெடும் என்றானாம்.                                             30

1870.‘ “வினைக்கு அரு மெய்ம்மையின்
     வனத்து விட்டனன்,
மனக்கு அரும் புதல்வனை”
     என்றல் மன்னவன் -
தனக்கு ‘அருந்தவம்; அது
     தலைக்கொண்டு ஏகுதல்
எனக்கு அருந் தவம்; இதற்கு
     இரங்கள். எந்தை! நீ.

     ‘எந்தை -; வினைக்கு அரு மெய்ம்மையன் - செய்தற்கு அரிய
சத்தியத்தை உடையதயரதன்;  “மனைக்கு அரும் புதல்வனை -
தன்