பக்கம் எண் :

330அயோத்தியா காண்டம்

உளதாகும்; தனிமையும் தீர்த்தி’ - தனிமைத் துன்பத்தையும்  நீக்குக;
என்று -; தன்மையால் உரைத்தி - இதமாகச் சொல்வாய்.

     பரதனுக்கு இராமன் சுமந்திரன்பால் சொல்லி அனுப்பிய செய்திகள்
இதனுட் கூறப்பெற்றன.                                         33

1873.‘ “வெவ்வியது, அன்னையால்
     விளைந்தது, ஈண்டு ஒரு
கவ்வை என்று இறையும் தன்
     கருத்தின் நோக்கலன்,
எவ் அருள் என்வயின்
     வைத்தது, இன் சொலால்,
அவ் அருள் அவன்வயின்
     அருளுக!” என்றியால்.

     ‘ஈண்டு - இவ்விடத்து;  அன்னையால் விளைந்தது - கைகேயியால்
உண்டாக்கியது; வெவ்வியது  ஒரு கவ்வை - கொடியதாகிய ஒரு துன்பம்;
என்று-;  இறையும் - சிறிதளவும்; தன் கருத்தின் - (பரதன்) தன்னுடைய
மனத்தின்கண்;  நோக்கலன் - கருதாதவனாய்; எவ் அருள் என் வயின்
வைத்தது-
எத்தகையதொரு அருளைஎன்னிடம் (பரதன்) வைத்துள்ளானோ;
அவ் அருள் - அத்தகைய அருளை;  அவன் வயின் -அந்தத் தயரத
மன்னனிடத்தும்;  அருளுக’ - காட்டுவானாக;  என்றி - என்று
சொல்லுவாய்.’

     கைகேயிமாட்டும், தயரதன்மாட்டும் என்னிடம் உள்ள அன்பிற்சிறிதும்
குறையாது அன்போடு நடந்துகொள்ளுமாறு பரதன்பால் கூறவும் என்றான்.
“ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,  தாய் எனும் பெயர்
எனைத் தடுக்கற்பாலதோ” என்று பரதன் கூறுவதைஇங்கே கருதுக.
(2173.)                                                       34

1874.‘வேண்டினென் இவ் வரம் என்று, மேலவன்
ஈண்டு அருள் எம்பிபால் நிறுவி, ஏகினை,
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு, இனிது
ஆண் தகை வேந்தனை அவலம் ஆற்றி, பின்,

     ஏகினை - (நீ) இங்கிருந்து  புறப்பட்டுச் சென்று;  பூண்ட
மாதவனொடும் -
மேற்கொண்ட பெருந்தவத்தை உடைய வசிட்ட
முனிவனோடும்;  கோயில் புக்கு - அரண்மனைஅடைந்து; ஆண்தகை
வேந்தனை -
ஆடவருள் சிறந்த தயரதனை;  இனிது அவலம் ஆற்றி -
இனிமையாக மனத்துயரத்தைத் தேற்றி;  இவ்வரம் வேண்டினென் என்று -
இந்த வரத்தைத்தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு;  ஈண்டு அருள்
எம்பிபால் நிறுவி -
என்னிடத்து வைத்துள்ள அருளை