என் தம்பியாகிய பரதன்பாலும் வைக்க வேண்டும் என்று நிற்குமாறு செய்து; பின் -பிறகு.... அடுத்த செய்யுளில் முடியும் முதலில் வரத்தை வாங்கிக்கொண்டு பின்னர் அவ்வரம் இன்னதுஎன்று கூறித் தம்பிபால் அருளை நிறுவுக என்றது ஒரு நயம். 35 | 1875. | ‘ “ஏழ் - இரண்டு ஆண்டும் நீத்து, ஈண்ட வந்து உனைத் தாழ்குவென் திருவடி; தப்பிலேன்” எனச் சூழி வெங் களிற்று இறை தனக்குச் சோர்வு இலா வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய். |
‘ஏழ் இரண்டு ஆண்டும் நீத்து - பதினான்னு ஆண்டுகளும் கழித்து; ஈண்ட வந்து -விரைவாக வந்து; உனைத் திருவடி தாழ்குவென் - உனது திருவடிகளை வணங்குவேன்; தப்பிலேன் - தவற மாட்டேன்’; என - என்று; சூழி - முகபடாம் அணிந்த; வெங்களிற்று இறை தனக்குக் - கொடிய யானையை உடைய தயரத மன்னனுக்குச் சொல்லி; சோர்வு இலா - தளர்ச்சி இல்லாத; மாதவன் சொலால் - வசிட்ட முனிவன்சொல்லால்; மனம் தெருட்டுவாய் - மனத்தைத் தெளிவிப்பாய்.’ ‘வாழி’ அசை. 36 | 1876. | ‘முறைமையால் எற் பயந் தெடுத்த மூவர்க்கும் குறைவு இலா என் நெடு வணக்கம் கூறி, பின் இறைமகன் துயர் துடைத்து இருத்தி, மாடு’ என்றான் - மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான். |
மறைகளை மறைந்து போய் - வேதங்களுக்கு எட்டாமல் மறைந்து நின்று; வனத்துள் வைகுவான் - எடுத்த அவதாரத்திற்கேற்ப வனத்தின்கண் வசிப்பவனாகிய இராமன்; என் பயந்து எடுத்த மூவர்க்கும் - என்னைப் பெற்றெடுத்த தாயர்; மூவர்க்கும் -மூன்று பேர்க்கும்; முறைமையால் - முறைமைப்படி; குறைவு இலா - சிறிதும் |