பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 333

கருதி அரக்கர்களை வதம் செய்யும் பெருமானது  நோக்கம் நிறை வேற
வேண்டித் தான் சிறை புகுந்து மற்றவர்களை வாழ்விக்க வனம் செல்லத்
துணிந்தனள் ஆதலின் ‘வாழ்வினை நோக்கி’ என்பதுசீதைக்குப்
பொருந்துமாறு அறிந்து  இன்புறலாம்.                              38

1878.அன்னவள் கூறுவாள்,
     ‘அரசர்க்கு, அத்தையர்க்கு,
என்னுடைய வணக்கம் முன்
     இயம்பி, யானுடைப்
பொன் நிறப் பூவையும்,
     கிளியும், போற்றுக என்று
உன்னும் என் தங்கையர்க்கு
     உணர்த்துவாய்’ என்றாள்.

     அன்னவள் - சிதை;  கூறுவாள் - (சுமந்திரனிடம் செய்தி)
சொல்லுவாளாகி;‘அரசர்க்கு, அத்தையர்க்கு - தசரதரிடத்தும்
மாமியாரிடத்தும்;  என்னுடை  வணக்கம்முன் இயம்பி - எனது
வணக்கத்தை முதலிற் சொல்லி (பிறகு);  யான் உடை -என்னுடைய;
பொன் நிறப் பூவையும் - பொன்னிறமான நாகணவாய்ப் புள்ளையும்;
கிளியும் - கிளியையும்;  போற்றுக - பாதுகாக்க; என்று  -;  உன்னும் -
என்னை நினைக்கின்ற; என் தங்கையர்க்கு - என் சகோதரிகளிடம்;
உணர்த்துவாய்’ -சொல்லுவாய்;’ என்றாள் -.

     சீதையின் பேதைமைத் தன்மையை இவ் வார்த்தைகள் விளக்கி நின்று
இத்தகைய குழந்தைத்தன்மையுடையாள் பின் வனம் புகுந்து  எவ்வளவு
உயர்ந்த மனவளர்ச்சியும் குண வளர்ச்சியும்பெற்றுத் திகழ்கிறாள் என்பதை
அறிந்துகொள்ள  உதவுகிறது.  தங்கையர் - ஊர்மிளை, மாண்டவி,  சுருத
கீர்த்தி ஆகியோர் - இவர் ஜனகன் புதல்வியர்.  இலக்குவன், பரதன்,
சத்துருக்கனன் மனைவியளர் ஆவர்.                               39

இராமன் தேற்றவும் சுமந்திரன் விம்முதல்  

1879.தேர் வலான், அவ் உரை
     கேட்டு, ‘தீங்கு உறின்
யார் வலார்? உயிர் துறப்பு
     எளிது அன்றே?’ எனாப்
போர் வலான் தடுக்கவும்,
     பொருமி விம்மினான் -
சோர்வு இலாள் அறிகிலாத்
     துயர்க்குச் சோர்கின்றான்.

     தேர் வலான் - சுமந்திரன்;  அவ் உரை கேட்டு - சீதை சொன்ன