வலிமை -இன்னமும் இறந்து போய் மேல் உலகத்தை அடையாத வலிமையை; கூறு’ - ஆற்றலைநினைவூட்டிச் சொல்;’ என்றான் -. போனகம் - அறுசுவை உணவு. ‘பொய்யில் மன்னன்’ என்றது மேலது போல் இகழ்வுரை.‘அன்பற்ற மன்னனுக்குச் சத்தியம் ஒரு கேடா’ என்று ஆத்திரம் அடைகிற இலக்குவனின்மனப்பாங்கு வெளிப்படுகிறது. இராமன்பால் கொண்ட பேரன்பினால் பேசுகிறான் ஆதலின்,தசரதனை முழுமையாக அறிந்திலன் என்க. ‘ஏன் தசரதனும் இராமனுடன் கானகம் வந்திருக்கக் கூடாது’என்பது இலக்குவனின் குறிப்பாக இப்பாடலில் தோன்றும். 43 | 1883. | ‘மின்னுடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு, “என் மன்னுடன் பிறந்திலென்; மண்கொண்டு ஆள்கின்றான் - தன்னுடன் பிறந்திலென்; தம்பி முன் அலென்; என்னுடன் பிறந்த யான் வலியென்” என்றியால். |
‘மின் உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு - ஒளியுடன் கூடிய வாளை ஏந்திய பரதசக்கரவர்த்திக்கு; ‘என் மன்னுடன் பிறந்திலென் கொண்டு ஆள்கின்றான் தன்னுடன்பிறந்திலென் - இராச்சியத்தைக் கொண்டு ஆளுகின்ற அரசனாகிய பரதனுடன் பிறந்தேனும்அல்லேன்; தம்பி முன் அலேன் - தம்பியாகிய சத்துருக்கனனுக்கு அண்ணனாகவும் இல்லேன்;என்னுடன் பிறந்த நான்; வலியன்’ - இன்னமும் வலிமையோடுதான் இருக்கின்றேன்; என்றி - என்று சொல்லுக.’ பரதனுக்குச் சொல்லியனுப்பிய செய்தி. இலக்குவன் விரக்தி, கோபம், இகழ்ச்சி, அவலம் ஆகியவற்றின் உச்ச நிலையில் இருந்து பேசுகிற பேச்சாக இது உள்ளது. தம்பியாகியசத்துருக்கனன் பரதனுடன் சேர்ந்திருத்தல்பற்றி அவனையும் வெறுத்தான் ஆதல் அறிக. ‘ஆல்’ஈற்றசை. 44 இராமன் இளவலை அடக்க, சுமந்திரன் புறப்படுதல் | 1884. | ஆரியன் இளவலை நோக்கி, ‘ஐய! நீ சீரிய அல்லன செப்பல்’ என்றபின், பாரிடை வணங்கினன், பதைக்கு நெஞ்சினன்; தேரிடை வித்தகன் சேறல் மேயினான். |
ஆரியன் இளவலை நோக்கி - இராமன் இலக்குவனைப் பார்த்து; ‘ஐய! -ஐயனே; நீ -; சீரிய அல்லன செப்பல்’ - |