குவிந்த போலும் -குவிந்தவற்றை ஒத்துள்ளன; ஆம்பலும் - (இரவில் மலர்ந்திருக்க வேண்டிய) ஆம்பற்பூக்களும்; சேரைப் பாம்பின தலைய ஆகி - சாரைப் பாம்பின் தலையைப்போன்றவையாய்; பரிந்தன - மனம் வருந்தி; குவிந்து சாய்ந்து - வாய்குவிந்து சாய்ந்து கிடந்தன; என்ற போது - என்றால்; நின்ற - மிகுந்துள்ளமற்றைய; போது - மலர்கள்; அலர்வது உண்டோ? - மலர்தல் உளதாகுமோ. செங்கழுநீர் இரவில் குவிதல் இயல்பு. அதனை இராமன் வறுமை நிலை நோக்கி மனம்வருந்திக் குவிந்ததாகக் கூறியது கவிஞரின் தற்குறிப்பேற்றம். இனி இரவில் மலர்ந்திருக்கவேண்டிய ஆம்பல் (குமுதம்) மலரே குவிந்து சாய்ந்தன என்றால் மற்றை மலர்களைச் சொல்லவே வேண்டாம் என்றார். ஒரறிவுயிர்கள் இராமன்பால் காட்டும் அன்பின் செறிவைப்புலப்படுத்தினார். மாலை நேரத்தில் அதாவது முன்னிரவில் குமுதம் மலராதிருத்தலை, ‘குண்டு நிர்ஆம்பலும் குவிந்தன் இனியே, வந்தன்று வாழியோ மாலை’ (குறுந். 122.). என்பது கொண்டுஅறிக. குவிந்த ஆம்பலுக்குச் சாரைப் பாம்பின் தலை உவமை. படம் எடுக்காத பாம்பு சாரைஆதலின் அது உவமையாயிற்று. சாரை - சேரை ஒன்றே. என்ற போது - போது - காலப் பெயர் -நின்ற போது - மலர். பொழுது என்னும் காலப் பெயர். அக்காலத்தே மலரும் மலருக்குப்பெயராய்ப் போது எனவந்தது. மலர் மலர்வதை வைத்துக் காலை - உச்சி மாலை முன்னிரவு, நள்ளிரவு, பின்னிரவு எனக்காலங்களை அறிதல் பழக்கம். 50 மூவரும் நிலவொளியில் செல்லுதல் | 1890. | அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும், அழகன்தன்னை எஞ்சல் இல் பொன் போர்த்தன்ன இளவலும், இந்து என்பான் வெஞ்சிலைப் புருவத்தாள்தன் மெல் அடிக்கு ஏற்ப, வெண் நூல் பஞ்சு இடைப் படுத்தாலன்ன வெண் நிலாப் பரப்ப, போனார். |
அஞ்சனக் குன்றம் அன்ன அழகனும்- மை மலை ஒத்த இராமனும்; அழகன்தன்னை -அவ்விராமனை; எஞ்சல் இல் - குறைதலில்லாத; பொன் போர்த்து அன்ன -பொன்னால் மூடினாற் போன்ற; இளவலும் - இலக்குவனும்; வெஞ்சிலைப் புருவத்தாள் தன்மெல்லடிக்கு ஏற்ப - கொடிய வில்லை ஒத்த புருவத்தை உடைய சீதையின் மென்மையான பாதத்திற்குப் பொருந்தும்படி; வெண் நூல் பஞ்சு இடைப்படுத்தால் அன்ன - வெண்மையானநூலை உண்டாக்கும் பஞ்சை வழியெல்லாம் பரப்பி வைத்தாற் போல; இளநிலா - இளையநிலவொளியை; இந்து என்பான் - சந்திரன் என்கிறவன்; பரப்ப - எங்கும்பரவச் செய்ய; போனார் - |