பக்கம் எண் :

346அயோத்தியா காண்டம்

     நாயகன் - தசரதன்; பின்னும் - திரும்ப;  தன் தேர்ப்பாகனை
நோக்கி -
தன்னுடைய சாரதியாகிய சுமந்திரனைப் பார்த்து; ‘நம்பி
சேயனோ அணியனோ?’என்று  உரைத்தலும் -
இராமன் தொலைவில்
உள்ளானோ அண்மையில் உள்ளானோ என்று கேட்க; தேர் வலானும் -
சுமந்திரனும்;  தானும் - இராமனும்; தம்பியும் -இலக்குவனும்; மிதிலைப்
பொன்னும் -
மைதிலியுமாக; வேய் உயர் கானம் -மூங்கில்கள் உயர்ந்து
வளர்ந்துள்ள காட்டுக்கு; போயினன் - சென்றான்:' என்றான்-;  என்ற
போழ்தத்தே -
என்று அவன் கூறிய அப்பொழுதே; ஆவி போனான் -
(தசரதன்) உயிர் நீத்தான்.

     தயரதன் தன்வாயால் காடு என்ற வார்த்தையைக் கூறுதற்கும் ஒவ்வாது
அஞ்சி, முன்பும் ‘வீரன்வந்தனனோ’ என்றதும், இங்கும் ‘சேயனோ
அணியனோ’ என்றதும் அறிந்து  உணரத் தக்கன. முன்பும்‘மண்ணே
கொள்நீ மற்றையது  ஒன்றும் மற’ என்று  இரண்டாவது வரத்தை மற்றையது
என்று தசரதன்குறித்ததை இங்கே நினைவுகூரலாம்.                   59

1899.இந்திரன் முதல்வ ராய
     கடவுளர் யாரும் ஈண்டி,
சந்திரன் அனையது ஆங்கு ஒர்
     மானத்தின் தலையில் தாங்கி,
‘வந்தனன், எந்தை தந்தை!’
     என மனம் களித்து, வள்ளல்
உந்தியான் உலகின் உம்பர்
     மீள்கிலா உலகத்து உய்த்தார்..

     இந்திரன் முதல்வராய கடவுளர் யாரும் ஈண்டி - இந்திரன்
முதலாகிய தேவர்கள்எல்லாரும் வந்து;  சந்திரன் அனையது - சந்திரனை
ஒத்ததாகிய;  ஓர் மானத்தின்தலையில் தாங்கி - ஒரு விமானத்திடத்தில்
சுமந்து;  ‘எந்தை தந்தை வந்தனன்’ எனமனம் களித்து - எம்முடைய
தலைவனாகிய இராமனின் தந்தையாய தசரதன் வந்துவிட்டான்’ என்று 
மனமகிழ்ச்சி அடைந்து; வள்ளல் - தசரதனை;  உந்தியான் உலகின் -
திருவுந்தித் தாமரையனாகிய பிரமதேவனது  சத்திய லோகத்தின்; உம்பர் -
மேலே உள்ள; மீள்கிலா உலகத்து- தன்னை அடைந்தவர் திரும்ப வாராத
உலகத்தில்;  உய்த்தார் -கொண்டு சேர்த்தார்கள்.

     இராமபிரான் திருமாலின் அவதாரம் ஆதலின், அவனுடைய
தந்தைக்குப் பரமபதம் கிடைத்தல் உறுதி என்பதனால்  சத்தி லோகத்துக்கு
மேற்பட்ட விஷ்ணுலோகத்தில் சேர்ந்தார்கள் என்று கம்பர் கூறினார்.
‘மீள்கிலா உலகம்’ என்பது  வினைவழிப்பிறந்திறந்து நலிவெய்தித் திரும்பி
வராத உலகம் என்பதே பொருள்.  பரமபதத்தில் நித்தியசூரிகளாய்
உள்ளாரும் இறைவனது சங்கற்பத்தால் பிறவாது வந்து போதல் உளதாகலின்
அதுபற்றிமீண்டும் மீட்சிப்