பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 347

படலத்து இராமனைக் காண தசரதன் வந்து போதற்குத் தடையில்லை என
அறிக. அவ்வாறில்லாக்கால்ஆழ்வார்கள், ஆசார்கள் திரு அவதாரத்துக்குப்
பொருளின்றாய  முடியும். ஆதலின்,  ஆங்கு -அசை.                60

தயரதன் பிரிவால் கோசலை புலம்பல்  

1900.‘உயிர்ப்புஇலன், துடிப்பும் இல்லன்’
     என்று உணர்ந்து, உருவம் தீண்டி,
அயிர்த்தனள் நோக்கி, மன்னற்கு
     ஆர் உயிர் இன்மை தேறி,
மயில் குலம் அனைய நங்கை
     கோசலை மறுகி வீழ்ந்தாள் -
வெயில் சுடு கோடைதன்னில்
     என்பு இலா உயிரின் வேவாள்.

     குலம் மயில் அனைய நங்கை கோசலை - சிறந்த மயிலை ஒத்த
பெண்ணாகியகோசலையானவள் ‘உயிர்ப்பு  இலன்;  துடிப்பும் இல்லன்’
என்று் உணர்ந்து -
தசரதனுக்குமூச்சு இல்லை துடிப்பும் தொட்டு;
அயிர்த்தனள் நோக்கி - ஐயுற்றுப் பார்த்து;  மன்னற்கு - தசரதனக்கு;
ஆர் உயிர் இன்மை தேறி -
அரிய உயிர் இல்லை என்பதுதெளிந்து;
வெயில் சுடு கோடைதன்னில்- வெள்ளில் சுடுகின்ற கோடைக் காலத்தில்;
என்பு இலா உயிரின் - எலும்பு இல்லாத (புழு முதலிய) பிராணிகள் போல;
வேவாள் -வெந்து;  மறுகி - மனம் சுழன்று;  வீழ்ந்தாள் - விழுந்தாள்.

     இறுதியடியின் சொல்லாட்சியை ‘என்பிலதனை வெயில் போலக் காயுமே
என்பதனோடு(குறள்.77.) ஒப்பிடலாம்.                              61

1901.இருந்த அந்தணனோடு எல்லாம்
     ஈண்றவன் தன்னை ஈனப்
பெருந்த தவம் செய்த நங்கை,
     கணவனில் பிரிந்து, தெய்வ
மருந்து இழந்தவரின் விம்மி,
     மணி பிரி அரவின் மாழ்கி,
அருந் துணை இழந்த அன்றிற்
     பெடை என, அரற்றலுற்றான்;

     இருந்த அந்தணனோடு - உந்தித் தாமரையில் இருந்த பிரமனோடு;
எல்லாம்ஈன்றவன் தன்னை ஈன - சர்வலோகங்களையும் தந்தருளிய