பரமாத்மாவைப் பெற்றெடுக்க; பெருந்தவம் செய்த நங்கை - பெரிய தவத்தைச்செய்த பெருமாட்டியாகிய கோசலை; கணவனில் பிரிந்து - தயரதனாகிய நாயகனைப் பிரிந்து;தெய்வ மருந்து இழந்தவரின் - தேவாமிர்தத்தை இழந்தவர்களைப் போல; விம்மி -துடித்து; மணி பிரி அரவின் மாழ்கி- (தனக்குக் கண்ணாகிய) மாணிக்கத்தை இழந்தபாம்பைப் போல மயங்கி; அருந்துணை இழந்த - அரிய ஆண்பறவையாகிய துணையை இழந்த; அன்றில் பெடை என - அன்றிற் பெண்பறவை போல; அரற்றலுற்றாள் - புலம்பத்தொடங்கினாள். பரமனுக்கே தாய்தான்; என்றாலும், ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’என்றவகையில் கோசலை அவலம் கொடியது. கோசலையின் துயரத்தைப் பல உவமைகளால் விளக்கினார்.தேவர்க்கு நிலைபேறு தருவது அமுதம்; பேரரசி என்ற தகுதிப்பாடு தயரதனால் பெற்றவள் கோசலை.பாம்பு முதிர்ச்சிக் காலத்தில் மணியை உமிழ்ந்து வெளியே வைத்து இரைதேடும் - மணி இழந்தால் துடித்து உயிர் நீக்கும் என்பது இலக்கியங்களில் வரும் செய்தி ஆகும். அன்றில் இனைபிரியாதுவாழும் பறவை. இதனால் இவை கணவனை இழந்து துயர் அடையும் கோசலைக்கு உவமை ஆயின. 62 கலிநிலைத்துறை | 1902. | ‘தானே! தானே! தஞ்சம் இலாதான், தகைவு இல்லான், போனான்! போனான்! எங்களை நீத்து, இப்பொழுது’ என்னா, வான் நிர் கண்டி மண் அற வற்றி, மறுகுற்ற மீனே என்ன, மெய் தடுமாறி விழுகின்றாள். |
‘தஞ்சம் இலாதான் - எளிமை இல்லாதவனும்; தகைவு இல்லான் - எவற்றாலும்தடுக்க முடியாத பெரு வலிமை படைத்தவனும் ஆகிய தயரதன்; தானே! தானே - தனியாக; எங்களை நீத்து - எங்களை யெல்லாமல் கைவிட்டு; இப்பொழுது போனான்! போனான்!’ -;என்னா - என்று சொல்லி; வான் நீர் சுண்டி - மழை நீர் இல்லாமல்போய்; மண் அற வற்றி - மண்ணிலும் நீர் இல்லாமல் வறவி; மறுகுற்ற - கலங்குதல் அடைந்த; மீனே என்ன - மீனைப் போல (உயிர் ஊசலாட); மெய் தடுமாறிவிழுகின்றாள் - உடம்பு நடுங்கி விழுகின்றாள். மேல் நீரும் கீழ் நீரும் இல்லாத பொழுது மீன் உயிர்வாழ இயலாமல் தடுமாறுதல் போல,தசரதனை இழந்தும், இராமனைப் பிரிந்தும் கோசலை தடுமாறினான் என்றார். அடுக்குகள்அவலத்தின்கண் வந்தன. தஞ்சம். - பற்றுக் கோடு எனப் பொருள் கொண்டு, பற்றுக்கோடுஅற்றவனாய்ப் போனான் எனக் கூறி, இராமனாகிய பற்றுக்கோட்டை இழந்தபடியால் என்பதும்ஒன்று. தஞ்சம் |