பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 355

ஐந்தினையும் கொள்க. இவற்றைப் ‘பஞ்சக் கிலேசம்’ என்பர். இந்தச் சுறா
மீன்கள் இயங்கும் கடல் என்று பிறவியை உருவகம் செய்தார். தசரதன்
உடல் மரக்கலம். முதலில் தசரதன் உயிரை அம்மரக்கலம் மேல் உலகு ஆய
அக்கரைக்குச் செலுத்தியது. இப்போது அவ்வுடலாகிய மரக்கலத்தை
இத்தேவிமார் பற்றியிருப்பது. தாமும் தசரதனின் உயிர் சென்ற இடத்துக்குச்
செல்வதற்குப் புணையாகப் பற்றியது போல் உள்ளது என்றார். ‘ஆல்’
அசை.                                                      72

சுமந்திரனால் செய்தி அறிந்து வசிட்டன் வந்து வருந்தல்  

1912.மாதரார்கள் அறுபதினாயிரரும்
     உள்ளம் வலித்து இருப்ப,
கோது இல் குணத்துக் கோசலையும்
     இளைய மாதும் குழைந்து ஏங்க,
சோதி மணித் தேர்ச் சுமந்திரன்
     சென்று, அரசன் தன்மை சொல, வந்த
வேத முனிவன், விதி செய்த
     வினையை நோக்கி விம்முவான்.

     மாதரார்கள் அறுபதினாயிரரும் - (தசரதன்) மனைவியராய
அறுபதினாயிரம்தேவிமார்களும்;  உள்ளம் வலித்து  இருப்ப - உடன்
கட்டை  ஏறுவது  என்று  மனத்தில் உறுதி செய்துகொண்டு  இருக்க;
கோது இல் குணத்துக் கோசலையும் இளையமாதும் குழைந்து ஏங்க-
குற்றமற்ற குணத்தை உடைய கோசலாதேவியும்,  சுமித்திராதேவியும்  மனம்
இளகி வாட;(இந்நிலையில்) சோதி மணித்தேர்ச் சுமந்திரன்சென்று -
ஒளியை உடைய மணிகள்கட்டப்பட்ட தேரை உடைய சுமந்திரன் போய்;
அரசன் தன்மை சொல - தயரதன் இறப்பைத்தெரிவிக்க;  வந்த வேத
முனிவன் -
அங்கே வந்த வசிட்ட முனிவன்;  விதி செய்தவினையை
நோக்கி -
ஊழ்வினை செய்த செயலை உள்ளத்தாலும் கண்ணாலும் நோக்கி;
விம்முவான் - வருந்துவான் ஆனான்.

     அரசன் துடிக்கும் காட்சியைக் காணச் சகியாமல் அப்பால் சென்ற
வசிட்டன் சுமந்திரனால்செய்தி அறிந்து  வந்து  வருந்தினன்.         73

1913.வந்த முனிவன், ‘வரம் கொடுத்து
     மகனை நீத்த வன்கண்மை
எந்தை தீர்ந்தான்’ என உள்ளத்து
     எண்ணி எண்ணி இரங்குவான்,
உந்து கடலில் பெருங் கலம் ஒன்று
     உடைய நிற்கத் தனி நாய்கன்