பக்கம் எண் :

356அயோத்தியா காண்டம்

 நைந்து நீங்கச் செயல் ஓரா
     மீகாமனைப்போல், நலிவுற்றான்.

     வந்த முனிவன் - அங்கே வந்த வசிட்டன்;  வரம் கொடுத்து
மகனை நீத்தவன்கண்மை -
வரத்தைக் கொடுத்து  மகனைப் பிரிந்த
கொடுமையை;  எந்தை -தயரதன்;  தீர்ந்தான் - நீங்கினான்;  என -
என்று;  உள்ளத்து -மனத்தில்; எண்ணி  எண்ணி  இரங்குவான் -
நினைத்து நினைத்து  மனம்தளர்பவனாய்;  உந்து  கடலில் - அலை
மோதும் கடலில்; பெருங்கலம்  ஒன்று உடையாநிற்க - பெரிய கப்பல்
ஒன்று  உடைந்துவிட; தனி நாய்கன் - தனிப்பட்ட  கப்பல்தலைவன்
இறந்துபட; செயல் ஓரா மீகாமனைப் போல் - தான் செய்வது இன்னது
எனத்தெரியாமல் திகைத்துத் தடுமாறுகின்ற   மாலுமியைப்போல;
நைவுற்றான் - வருந்தினான்.

     மன்னவன் உடல் மரக்கலம் - மன்னவன் மரக்கலத் தலைவன் -
வசிட்டன் மாலுமி என உவமைகொள்க.                           74

தசரதன் உடலைத் தைலத்தில் இடுதல்  

1914.‘செய்யக் கடவ செயற்கு உரிய
     சிறுவர், ஈண்டையார் அல்லர்;
எய்தக் கடவ பொருள் எய்தாது
     இகவா’ என்ன, இயல்பு எண்ணா,
‘மையற் கொடியாள் மகன் ஈண்டு
     வந்தால் முடித்தும் மற்று, என்னத்
தையற் கடல்நின்று எடுத்து, அவனைத்
     தயிலக் கடலின்தலை உய்த்தான்.

     ‘செய்யக் கடவ- (தசரதன் இறந்த பின்னர் அவனுக்குச்) செய்தற்குரிய
கடமைகளை;செயற்கு உரிய - செய்தற்கு உரிமை  உடைய;  சிறுவர் -
குமாரர்கள்;  ஈண்டையார் அல்லர் - இங்கே இல்லை;  எய்தக் கடவ
பொருள் எய்தாது  இகவா’ -
வரவேண்டியவைகள் வராது போகா;
என்ன - என்று;  இயல்பு எண்ணா - உலக இயல்பும் ஊழின் இயல்பும்
கருதி; ‘மையல் கொடியாள் மகன்- மன மயக்கம் கொண்ட கொடியவளான
கைகேயியின் மகனாகிய  பரதன்; ஈண்டு வந்தால் - அயோத்திக்கு வந்து
சேர்ந்தபிறகு;முடித்தும் - (அரசனது உத்திரிகிரியைகளைச்) செய்து
முடிப்போம்;  என்ன -என்று கருதி;  தையல் கடல் நின்று  எடுத்து -
கோசலை சுமித்திரை கைகேயி மற்றும்அறுபதினாயிரம் மகளிர்களாய
பெருங்கடலில்  இருந்து தசரதனை எடுத்து; அவனை-;  தயிலக்கடலின்
தலை  உய்த்தான் -
கடல்போல் மிகுந்த தயிலத்தினிடத்தில் கொண்டு
சேர்த்தான்.