பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 357

     ‘மற்று’ அசைநிலை. பரதன் உரிமைக்கு ஆகான் என்று வசிட்டனிடமே
தசரதன் மறுத்திருப்பதும், அது வசிட்டனுக்குத் தெரிந்துண்மையும், பின்னர்ப்
பரதன் வந்து கடன் செய்ய முனைந்தபோது ‘அரசன் நின்னையும் துறந்து
போயினான்’ என்று பரதனை (2231) வசிட்டனே தடுப்பதுண்மையும் இருக்க,
இங்கே வசிட்டனே ‘மையல் கொடியாள் மகன் ஈண்டு வந்தால் முடிந்தும்’
என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும் என்ற ஒரு சிலர்க்கு ஐயம் எழுவது
உண்மையே. தற்போது பரதனே கோசல நாட்டுக்கு அதிபதி ஆதலின்,
சக்கரவர்த்தி வராமல் அரசாங்க சம்பந்தமான எதுவும் வேறு யாரும் செய்ய
இயலாது என்பதும். அடுத்துச் செயற்குரிமை படைத்தவன் சத்ருக்கனன்
ஆயினும் பரதன் வராமல் சத்துருக்கனன் வரமாட்டான் என்பதும் கருதியே
வசிட்டன் அவ்வாறு கூறினான் என்பது உய்த்துணரப்படுதலின் ஐயத்துக்கு
இடமில்லை என அறிக. ‘தையற் கடல் நின்று எடுத்து அவனைத் தயிலக்
கடலின் தலை உய்த்தான்’ என்ற சொல்லழகு அறிந்து இன்புறத் தக்கது.
‘உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’ ‘உறற்பால தீண்டா விடுதல் அரிது’
(நாலடி. 4,9.) என்பவற்றை இங்கு ‘எய்தக் கடவ பொருள் எய்தாது இகவா’
என்பதுடன் இணைத்துக் கருதுக.                                  75

தேவிமாரை அகற்றி அனுப்பி, பரதனுக்கு ஓலை அனுப்புதல்  

1915.தேவிமாரை, ‘இவற்கு உரிமை
     செய்யும் நாளில், செந் தீயின்
ஆவி நீத்திர்’ என நீக்கி,
     அரிவைமார்கள் இருவரையும்
தா இல் கோயில்தலை இருத்தி,
     ‘தண் தார்ப் பரதற் கொண்டு அணைக’ என்று
ஏவினான், மன்னவன் ஆணை
     எழுது முடங்கல் கொடுத்து, அவரை,

    தேவிமாரை -அறுதிபதினாயிரம் தேவியரையும்; ‘இவற்கு உரிமை
செய்யும் நாளில் -
இவனுக்குஇறுதிக்கடன் செய்யும் நாளில்; செந்தீயின்
ஆவி நீத்திர் -
நெருப்பில் உடன்கட்டை ஏறி உயிர்விடுவீராக;’ என
நீக்கி
- என்று  போகச்செய்து;  அரிவைமார்கள்இருவரையும் -
பட்டத்தரசியர் இருவரையும்; தாவில் கோயில் தலை இருத்தி -குற்றமற்ற
அரண்மனையில் இருக்குமாறு  செய்து;  மன்னவன் ஆணை எழுதும்
முடங்கல் கொடுத்து அவரை-
அரசன் ஆணையை எழுதும் ஓலையைக்
கொடுத்துத் தூதுவரை;  ‘தண்தார்ப் பரதன் கொண்டுஅணைக’ என்று
ஏவினான் -
குளிர்ந்த மாலை அணிந்த பரதனை அழைத்துக்கொண்டு
வருக என்றுசொல்லி அனுப்பினான்.

     அவரை என்பது பண்டறி சுட்டு. ஓலை எடுத்துச் செல்லற்குரிய
தூதுவர் என்பதுஉணரப்பட்டது.                                  76

1916. போனார் அவரும், கேகயர்கோன்
     பொன் மா நகரம் புகஎய்த;