பக்கம் எண் :

தைலம் ஆட்டு படலம் 361

     தேர்ச்சுவடு நகரம் நோக்கிச் செல்வது கண்டு மக்கள் மகிழ்தல்  

1920.தேரின் சுவடு நோக்குவார்;
     திரு மா நகரின் மிசைத் திரிய
ஊரும் திகிரிக் குறி ஒற்றி
     உணர்ந்தார்; எல்லாம் உயிர் வந்தார்;
‘ஆரும் அஞ்சல்; ஐயன் போய்
     அயோத்தி அடைந்தான்’ என, அசனிக்
காரும், கடலும், ஒருவழிக் கொண்டு
     ஆர்த்த என்னக் கடிது ஆர்த்தார்.

     எல்லாம் - எல்லாரும்;  தேரின் சுவடு நோக்குவார் - தேரின்
சக்கரத்தழும்பைப் பூமியில் பார்த்து; திருமாநகரின் மிசைத் திரிய ஊரும்
திகிரிக் குறி ஒற்றி உணர்ந்தார் -
அழகிய பெரிய அயோத்தி நகரின்
மேல் திரும்பச் சுழன்று  செல்லும் சக்கரஅடையாளத்தைப் பொருத்திச்
சார்ந்து அறிந்து; உயிர் வந்தார் - உயிர் வரப்பெற்று; ‘ஆரும் அஞ்சல்-
யாரும்  பயப்படாதீர்கள்;  ஐயன் அயோத்தி போய்அடைந்தான்’ -
இராமன் அயோத்திக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான்;’ என -என்று; அசனிக்
காரும் -
இடி உடைய மேகமும்; கடலும் -; ஒரு வழிக் கொண்டு -
ஓரிடத்தில் சேர்ந்து;  ஆர்த்த என்ன - ஒலி்த்தன என்னும்படி;  கடிது -
விரைவாக;  ஆர்த்தார் - மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள்.

     ஆர்ப்புக்கு மேகமும் கடலும் சேர்ந்த ஒலி உவமை. சுமந்திரன்சென்ற
தேர்ச் சுவட்டை இராமன் திரும்பச் சென்றதாகக் கருதி மயங்கினர்.       81

1921.மான அரவின் வாய்த் தீய
     வளை வான் தொளை வாள் எயிற்றின்வழி
ஆன கடுவுக்கு, அரு மருந்தா
     அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து,
போன பொழுதில் புகுந்த உயிர்
     பொருந்தார் ஒத்தார் - பொரு அரிய
வேனில் மதனை மதன் அழித்தான்
     மீண்டான் என்ன ஆண்டையோர்.

     ஆண்டையோர் - அங்கேயிருந்த அந்நகரத்தவர்; பொரு அரிய
வேனில் மதனை மதன்அழித்தான் -
ஒப்பற்ற வசந்தகாலத்துகுரிய
மன்மதனை அழகால் செருக்கழித்த இராமன்; மீண்டான் என்ன -
அயோத்திக்குத் திரும்பிவிட்டான் என்று கருதி; மான அரவின் -சீற்றம்
பொருந்திய பாம்பின்;  வாய்த் தீய வளை  வான்தொளை