| ‘தக்கான் போனான் வனம்’ என்னும் தகையும் உணர்ந்தார்; - மிகை ஆவி அக் காலத்தே அகலுமோ, அவதி என்று ஒன்று உளதானால்? |
புக்கார் -. நகரிற் புகுந்த மக்கள்; ‘அரசன் பொன்னுலகம் போனான்’ என்னும் பொருள் கேட்டார் - தசரதன் தேவர் உலகம் சென்றான் என்கிற செய்தியைக்கேட்டு; நெஞ்சம் உக்கார் - மனம் உடைந்து; உயிர் உகுந்தார் - உயிர்சிந்தினார்கள்; உற்றது எம்மால் உரைப்ப அரிது - அவர்கள் அடைந்த துன்பம் எம்மால்சொல்லுதற்கு இயலாது; ‘தக்கான் வனம் போனான்’ - இராமன் வனம் சென்றான்; என்னும் தகையும் உணர்ந்தார் - என்கின்ற தன்மையும் அறிந்தார்கள்; மிகை ஆவி -எஞ்சி நின்ற உயிர்; அவதி என்று ஒன்று உளதானால் - உயிர் போகும் கால எல்லைஎன்று ஒன்று இருக்குமானால்; அக் காலத்தே அகலுமோ? - செய்தி கேட்ட அக்காலத்தேயேபோகுமா? (போகாது). உயிர் போவதற்கு வகுத்த கால எல்லையால் உயிர் தங்கியுள்ளதே அன்றி வேறன்று எனநகரமாந்தர் துயரம் கூறியபடியாம். ‘ஆல் ’அசை. அரசன் இறந்து போன செய்தி கேட்டு உகுந்தஉயிர் போக மிகுதி உயிர் இராமன் வனம் போனதறிந்தும் போகாமைக்குக் காரணம் அது நீங்கும்கால எல்லை என்ற ஒன்று விதியால் வகுக்கப்பட்டிருப்பதனால் தான் என்று கூறினார். 84 1924. | மன்னற்கு அல்லார்; வனம் போன மைந்தற்கு அல்லார், வாங்க அரிய இன்னற் சிறையின் இடைப்பட்டார், இருந்தார்; நின்ற அருந் தவனும் ‘உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான்?’ என்று, பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து, பதைப்பை நீக்கினான். |
(மீண்ட நகரினர்), மன்னற்கு அல்லார் - (நகரில் இருந்து) இறந்துபோனதயரதனுக்கும் உதவாமல்; வனம் போன மைந்தற்கு அல்லார் - காடு சென்ற இராமனுடன் கூடச்சென்று அவனுக்கும் உதவாமல்; வாங்க அரிய - நீக்க முடியாத; இன்னல் சிறையின் இடைப்பட்டார் - துன்பமாகிய சிறையிலே அகப்பட்டுத் தவிப்பாராய்; இருந்தார் -; நின்ற அருந்தவனும் - அவர்களிடையே இருந்த வசிட்டனும்; ‘யான் -; உன்னற்கு அரியபழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது என்று - நினைத்தற்கும் அரிய பழி வந்து சேரும் என்றுகருதி அல்லவா நகரில் தங்கியது என்று கூறி; பன்னற்கு அரிய பல நெறியும் |