6. கங்கைப் படலம் கங்கையைப் பற்றிய படலம் எனப்பெறும். காடு செல்லப் புறப்பட்ட இராமன் சீதையோடும்இலக்குவனோடும் வழிநடந்து, வழியில் உள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து, கங்கைக்கரை சேர்ந்து, அங்குள்ள முனிவர்கள் வர வேற்று உபசரிக்க, அதனை ஏற்று, நீராடி, எரி ஓம்பி, அழுதுசெய்து தங்களை மகிழ்விக்குமாறு முனிவர் வேண்ட, சீதையோடு கங்கையில் நீராடி, முனிவர்அளித்த விருந்தை ஏற்று அங்கே இருத்தலாகிய செய்திகள் இப்படலத்தில் கூறப்படுகின்றன. இவைஅனைத்தும் கங்கையைச் சார்ந்து நிகழ்வன ஆதலின் இது கங்கைப் படலம். எனப்பெற்றது. இராமன் சீதையோடும் இலக்குவனோடும் கானகத்தில் செல்லுதல் சந்தக் கலிவிருத்தம் 1926. | வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய, பொய்யே எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் - ‘மையோ, மரகதமோ, மறி கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர் அழியா அழகு உடையான். |
மையோ - (கண்ணுக்கு இடக்கூட்டிய) மையோ; மரகதமோ - பச்சைநிறஒளிக்கல்லாகிய மரகதமோ; மறிகடலோ - (கரையின்கண் அலைகளால்) மறிக்கின்றகடலோ; மழை முகிலோ - பெய்யும் கார் மேசுமோ; ஐயோ - (உவமை சொல்லமாட்டாத நிலையாகிய) ஐயோ!; வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் இவன்? - தன்உருவம் என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இந்த இராமன்; வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறை - சூரியனது ஒளியானது தன்திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் இல்லையாய் மறைந்துவிடும்படி; பொய்யோஎனும் இடையாளொடும் - இல்லையோ என்று சொல்லத்தக்க |