தவம் அன்னது ஓர் செயலாள் -நிறைந்த தவத்தைப் போன்ற ஒப்பற்ற தூய செயலை உடையவளும்; வெளி அன்னது ஓர்இடையாளொடும் - ஆகாயம் போன்றதாகிய இல்லையான ஒப்பற்ற இடையினை உடையவளுமாகியசீதையோடும்; விடை அன்னது ஓர் நடையான் - இடபத்தை ஒத்த ஒப்பற்ற நடையினை உடையஇராமன்; களி அன்னமும் - செருக்கினை உடைய ஆண் அன்னமும்; மட அன்னமும் -மடப்பத்தை உடைய பெண் அன்னமும்; நடம் ஆடுவ - சேர்ந்து உலாவிடுவதை; கண்டான்-. வண்டு கூந்தலின் கருமைக்கும், கருமணல் கருமையோடு நெறிப்புக்கும் உவமையாம். முனிவர் தவம்போன்றது பெண்டிர் கற்பொழுக்கம். இங்குச் செயல் என்பது கற்பினை. களி, மடம் என்பன ஆண்,பெண் என்பனவற்றைக் காட்டும் அடையாளம், தானும் சீதையும் நடப்பது போன்ற குறிப்பினை அவற்றின்பால் கண்டான் இராமன் என்க. ‘நடமாடுதல்’ என்பது வழக்கின்கண் ‘உலாவிடுதல்’என்னும் பொருளில் வருதல் கண்கூடு. இனி அன்னங்கள் நடப்பது நடனம் ஆடுதல் போல உள்ளது என்றலும் ஒன்று. 2 1928. | அஞ்சு அம்பையும் ஐயன்தனது அலகு அம்பையும் அளவா, நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையாள், துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின்படி சுழலும் கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள். | அஞ்சு அம்பையும் - மன்மதனது மலர் அம்புகள் ஐந்தனையும்; ஐயன்தனது - இராமனது; அலகு - கூர்மையான; அம்பையும் - கணையையும்; அளவா - அளந்து(தனக்குவமை யாகானென்று தள்ளி); நஞ்சங்களை - கொடிய விடங்களை; வெல ஆகிய -வெல்லும் தன்மை படைத்தனவாகிய; நயனங்களை உடையாள் - அழகிய கண்களை உடைய சீதை;துங்சும் களி வரி வண்டுகள் - உறங்கும் செருக்குடைய அழகிய வண்டுகள்; குழலின்படி -கூந்தலிற் படியும் தன்மையில்; சுழலும் - சுற்றியிருக்கப்பெற்ற; கஞ்சங்களை -தாமரை மலர்களை; மஞ்சன் கழல் - மைந்தனாகிய இராமனது திருவடிகள்; நகுகின்றது -உவமையாகாதென்று இகழ்ந்து சிரிப்பதனை; கண்டாள்-. தாமரை, முல்லை, அசோகு, மா, நீலம், என்பன மன்மதனது மலர் அம்புகளாம். இங்கு மலர்கருதாது அம்பு என்பதுபற்றிக் கூறப்பெற்றது. தேனுண்டு உறங்கும் செருக்குடைய வண்டுகள். குழலின்படி- வேய்ங்குழல் போல ரீங்காரித்து என்றும் நெய்குழல்போல போவது வருவது ஆகி என்றும் ஆம்.இராமனது திருவடி அழகிற்குத் தாமரை ஒப்பாகாமை கருதி மகிழ்ந்தாள் சீதைஎன்றவாறாம். 3 |