1993. | திருஉளம்எனின், மற்று என் சேனையும் உடனே கொண்டு, ஒருவலென் ஒருபோதும் உறைகுவென்; உளர் ஆனார் மருவலர்எனின், முன்னே மாள்குவென்; வசை இல்லேன்; பொரு அரு மணி மார்பா! போதுவென், உடன்’ என்றான். |
‘பொரு அரு மணி மார்பா! - ஒப்பற்ற அழகிய மார்பினை உடையவனே!; திரு உளம்எனின் - உன் மனத்திற்கு உடன்பாடாக இருக்குமானால்; மற்று என் சேனையும் உடனே கொண்டு- நான் வருவதோடு அல்லாமல் என்னுடைய சேனைகளையும் கூட அழைத்துக் கொண்டு; ஒருபோதும்-எல்லாக் காலத்தும்; ஒருவலென்- நீங்காதவனாய்; உறைகுவென் - உன்னுடனேதங்குவேன்; மருவலர் உளர் ஆனார் எனின் - தீங்கு செய்யும் பகைவர்கள் யாரேனும்வருவார்கள் ஆயின்; முன்னே மாள்குவென் - உனக்கு முன்னே அவர்களுடன் போர்செய்து (அவர்களை அழித்து) நானும் இறந்துபடுவேன்; வசை இல்லேன் - (அடைக்கலம் புகுந்தவரைமாற்றானிடம் காட்டிக் கொடுத்தான் என்ற) பழிச் சொல்லுக்கு ஆளாகமாட்டேன்; உடன்போதுவென் என்றான் - உன்னுடனேயே வருவேன் என்று கூறினான். ‘மற்று’ வினைமாற்று. நான் வருதல் அன்றிச் சேனையும் உடன் கொண்டு வருவேன் எனப் பொருள் படுதலின். மருவலரை அழித்து மாள்தலும் அழியாது முன்னே மாளுதலும்வகைக்கு இடனாகாமை உணர்க. 41 இராமன் குகனை அவன் இனத்தாருடன் இருக்கக் கட்டளையிடல் 1994. | அன்னவன் உரை கேளா, அமலனும் உரைநேர்வான்; ‘என் உயிர் அனையாய் நீ’ இளவல் உன் இளையான்; இந் நன்னுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம் உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன்.’ |
அமலனும்- குற்றமற்றவனாகிய இராமனும்; அன்னவன் உரைகேளா- அந்தக்குகனது வார்த்தையைக் கேட்டு; உரை நேர்வான் - பதில் கூறுவானாகி; ‘நீ என் உயிர்அனையாய் - (குகனே!) நீ என் |