இராமன் சீதைக்கு வழியில் இனிய காட்சிகளைக் காட்டுதல் 2001. | ‘மன்றலின் மலி கோதாய்! மயில் இயல் மட மானே! - இன் துயில் வதி கோபத்து இனம் விரிவன எங்கும், கொன்றைகள் சொரி போதின் குப்பைகள், குல மாலைப் பொன் திணி மணி மானப் பொலிவன - பல - காணாய்! |
மன்றலின் மலி கோதாய்! - மனத்தால் நிரம்பிய மாலை அணிந்தவளே!; மயில்இயல் மட மானே! - மயில் போன்ற சாயலை உடைய இளைய மான் அனையாளே!; இன் துயில்வதி கோபத்து இனம் விரிவன எங்கும் - இனிய தூக்கத்தில் உள்ள இந்திரகோபப்பூச்சிகளின் கூட்டங்கள் பரந்து கிடக்கும் எல்லா இடத்தும்; கொன்றைகள் சொரி போதின்குப்பைகள் - கொன்றை மரங்கள் சொரிந்த மலர்த் தொகுதிகள்; குல மாலைப் பொன்திணிமணி மானப் பொலிவன பல - சிறந்த மாலைகளின் பொன்னில் பதிக்கப்பட்ட மணிகளைப்போல் அழகுடையனவாகிய; காட்சிகள் பலவற்றையும்; காணாய் - பார்ப்பாயாக. இந்திரகோபப் பூச்சி செந்நிறம் உடையது. இரத்தின மணிபோலும்; அடுத்துக் கொன்றைமலர் மஞ்சள் நிறம் உடையது ஆதலின் பொன்பெறும். இரண்டும் விரவி இருக்கின்ற வழிகள்இரத்தினக் கற்கள் அழுத்திய பொன் மாலை கிடப்பதுபோல உள்ளன என்றார். குப்பை என்பதுகுவியல்; இங்கு மலர்க் குவியல். 3 2002. | ‘பாண், இள மிஞிறு ஆக, படு மழை பணை ஆக, நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல், “பூணியல்! நின சாயல் பொலிவது பல கண்ணின் காணிய” எனல் ஆகும், களி மயில் - இவை காணாய்! |
பூண் இயல் - அணிகளை இயல்பாக உடையவளே!; களி மயில் - களிப்புநிறைந்த மயில்கள்; இள மிஞிறு பாண் ஆக - இளைய வண்டு பாட்டுப் பாடும் பாணன்ஆகவும்; படு மழை - பொழிகின்ற மழையின் ஒலி; பணை ஆக - பறை ஒலியாகவும்கொண்டு; நாணின - |