வெட்கமுற்றனவாய்; தொகுபீலி - சுருக்கிக் கொண்ட தம் தோகை களை; கோலின -விரித்து வளைத்தனவாய்; நடம் ஆடல் - நடனம் ஆடுதல்; நின சாயல் பொலிவது -உன்னுடைய சாயல் தம்மிடத்தே விளங்குவதை; பல கண்ணில் - தம்முடைய தோகையில் உள்ளபல கண்களால்; காணிய- காண்பதற்கு; எனல் ஆகும் - என்று சொல்லாம்படியுள்ள; இவை - இக் காட்சிகளை; காணாய் -. தோகை சுருங்கி இருக்குங்கால் அதில் உள்ள கண்கள் வெளித் தோன்றா; விரித்தவழிகண்கள் தோன்றும் ஆதலின், ஆடும் மயில் தம் தோகைக் கண்களால் பிராட்டியின் சாயல்தம்மிடத்தே பொருந்தியுள்ளமையைப் பார்ப்பது போலும் என்று கூறினார். 4 2003. | ‘சேந்து ஒளி விரி செவ் வாய்ப் பைங் கிளி, செறி கோலக் காந்தளின் மலர் ஏறிக் கோதுவ, - கவின் ஆரும் மாந் தளிர் நறு மேனி மங்கை! - நின் மணி முன்கை ஏந்தின எனல் ஆகும் இயல்பின; இவை காணாய்! |
கவின் ஆரும்- அழகு பொருந்திய; மாந்தளிர் நறுமேனி மங்கை- மாந்தளிர் போன்ற மணமும் நிறமும் கூடிய மேனியை உடைய சீதையே!; சேந்து ஒளி விரி - சிவந்து ஒளி விரிக்கின்ற; செவ்வாய் - சிவந்த வாயினை உடைய; பைங்கிளி -பசிய கிளி; கோலம் செறி - அழகு பொருந்திய; காந்தளின் மலர் ஏறிக் கோதுவ -காந்தள் மலரின்மேல் ஏறி அம் மலரைக் கோதுகின்றவை; நின் மணி முன்கை ஏந்தின எனல் ஆகும் இயல்பின - நின்னுடைய அழகிய முன்கையில் ஏந்திக் கொண்டிருக்கின்றதாகச்சொல்லப்பெறும் இயல்பினை உடைய; இவை - இக் காட்சிகளை; காணாய் -. காந்தள் மலர் மகளிர் கைபோலும் ஆதலின் அம்மலர்மேல் ஏறி அம் மலரைக் கோதுகின்றகிளி, பிராட்டியின் முன் கைமேல் ஏறி அமர்ந்துள்ளது போல் காட்சி அளிப்பதாயிற்று. 5 2004. | ‘நெய்ஞ் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றிக் கைஞ் ஞிறை நிமிர், கண்ணாய்! - கருதின இனம் என்றே மெய்ஞ் ஞிறை விரி சாயல் கண்டு, நின் விழி கண்டு, |
|