பக்கம் எண் :

416அயோத்தியா காண்டம்

    காந்தள் முகையைப் பாம்பு என்று மயில் கவர, அது கண்டு முல்லை
சிரிப்பதாகக் கூறியது. முல்லைஅரும்புகள் பற்களைப் போலும் ஆதலின்
அம்முல்லை அரும்புகள் தோன்றிய காட்சியைப்சிரிப்பதாகத்
தற்குறிப்பேற்றம் செய்தார்.  சிறு குறு நகை - சிறு என்பது இகழ்ச்சியையும்,
குறு என்பது புன் சிரிப்பு என்பதனையும் அறிவிக்க வந்தன.  களி மஞ்ஞை
என்றது போதை மிகுதியால்காந்தள் முகையைப் பாம்பென மயங்கியது
எனக் காரணம் கூறியவாறாம்.                                    9

2008.‘குன்று உறை வய மாவின்
     குருளையும், இருள் சிந்திப்
பின்றினது எனல் ஆகும்
     பிடி தரு சிறு மாவும்,
அன்றில பிரிவு ஒல்லா;
     அண்டர்தம் மனை ஆவின்
கன்றொடு விளையாடும்
     களியன பல -. காணாய்!

     குன்று உறை வயமாவின் குருளையும் - மலையில் வாழும் வலிமை
உள்ள புலியின்குட்டியும்; இருள் சிந்திப் பின்றினது எனல் ஆகும் பிடி
தரு சிறு மாவும் -
இருள் கீழேசிதறிப் பின்னிக் கொண்டது
என்னும்படியுள்ள கரிய பெண் யானை ஈன்ற சிறிய யானைக் குட்டியும்;
அண்டர்தம் - இடையர்களது;  மனை - வீட்டில்  உள்ள;  ஆவின்
கன்றொடு -
பசுக் கன்றோடு; அன்றில - மாறுபடாதனவாய்;  களியன -
களிப்புடையனவாய்; விளையாடும் பல - விளையாடுகின்ற பல
உயிரினங்களையும்; காணாய் -.

     கரிய பிடி இருள் பின்னிப் பிணைந்திருத்தல் போலும். பிடி மண்ணில்
உள்ளதாதலின்வானத்தில் பரவிய இருள் பூமியில் சிந்திப் பின்னியது போல
என்றார். முனிவர் உறைவிடம்ஆதலின் இவை தம்முள் பகை இலவாய்
வினையாடின என்க.                                            10

2009.‘அகில் புனை குழல் மாதே!
     அணி இழை எனல் ஆகும்
நகு மலர் நிறை மாலைக்
     கொம்புகள், நதிதோறும்
துகில் புரை திரை நீரில்
     தோய்வன, துறை ஆடும்
முகில் இள முலையாரின்
     மூழ்குவ பல - காணாய்!

     அகில் புனை குழல் மாதே! - அகிற் புகையால் மணம்  ஊட்டிப்
புலர்த்தப்பெற்றகூந்தலையுடைய பெண்ணே!; அணி இழை எனல்