பக்கம் எண் :

வனம் புகு படலம் 417

ஆகும் - அலங்காரமாகிய அணிகலன் என்று சொல்லும்படி  பொருந்திய;
நகு மலர் -
பூத்த மலர்கள்;நிறை- நிறைந்த; மாலை- மலர்த் தொகுதியை
உடைய;  கொம்புகள் பல -பூங்கொம்புகள் பல; துறை ஆடும் முகிழ்
இள முலையாரின் -
நீர்த்துறையில் நீராடுகின்றஅரும்பிய இளமுலை
உடைய மகளிர் போல;  நதிதோறும் - ஆற்றிடங்களில் எல்லாம்; துகில்
புரை திரை நீரில் தோய்வன -
(வெண்) பட்டாடையை ஒத்த அலைகளை
உடைய நீரில்படிந்து மூழ்குவனவற்றை; காணாய் -

     பூத்த மலர்த் தொகுதியுடைய கொம்புகள் அணி அணிந்த மகளிர்
போல உள்ளன. இவற்றைமாலைகள் என்றும் பொன் அணிகலன் என்றும்
கூறல் கவிமரபு. “கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையின்
கொன்றைகள் மேல்,  தூங்கு பொன் மாலைகளோடு  உடனாய் நின்று
தூங்குகின்றேன்”(திவ்ய. 594.) என்பது  காண்க.                     11

2010.‘முற்றுறு முகை கிண்டி,
     முரல்கில சில தும்பி,
வில் திரு நுதல் மாதே!
     அம் மலர் விரி கோங்கின்
சுற்று உறு மலர் ஏறித்
     துயில்வன, சுடர் மின்னும்
பொன் தகடு உறு நீலம்
     புரைவன பல - காணாய்!

     வில் திரு நுதல் மாதே! - வில்லைப் போன்ற அழகிய நெற்றியை
உடைய பெண்ணே!; சில தும்பி - சில வண்டுகள்;  அம் மலர் விரி
கோங்கின் -
அழகிய மலர்கள்விரிந்துள்ள கோங்க மரத்தினது; முற்றுறு
முகை கிண்டி -
முற்றிய அரும்புகளைக் குடைந்து(தேன் உண்டு);
முரல்கில - பாடாதனவாய்;  சுற்று  உறு மலர் ஏறி - வட்டமாகப்
பொருந்திய மலரில் ஏறி;  துயில்வன பல - உறங்குகின்றன பலவும்; சுடர்
மின்னும் -
ஒளிவிட்டு விளங்குகின்ற; பொன் தகடு உறு- பொன் தகட்டில்
பொருந்திய; நீலம் புரைவன- நீல மணியை ஒத்துள்ளனவற்றை; காணாய்-.

     முற்றுறு முகை - மலரும் பருவத்தரும்பு. அதனையே தேனீக்கள்
குடைதல் இயல்பு. கோங்கமலர்பொன்னிறம்  படைத்தது.  கோங்க மலரில்
உறங்கும் வண்டு பொன்னில் பதித்த நீலமணிபோல் உள்ளது.          12

2011.‘கூடிய நறை வாயில்
     கொண்டன, விழி கொள்ளா
மூடிய களி மன்ன,
     முடுகின நெறி காணா,