பக்கம் எண் :

418அயோத்தியா காண்டம்

 ஆடிய, சிறை மா வண்டு,
     அந்தரின், இசை முன்னம்
பாடிய பெடை கண்ணா
     வருவன பல - காணாய்!

     சிறை மா வண்டு- சிறகுகளை உடைய கரிய (ஆண்) வண்டு; கூடிய
நறை வாயில்கொண்ட -
மிக்க தேனை வாயிற் கொண்டன வாய்; விழி
கொள்ளா -
(அம்மயக்கத்தால்) விழி திறந்து  பார்க்க மாட்டாதவையாய்;
மூடிய களி மன்ன -கண்ணை மூடிக்கொள்ளுமாறு போதை பொருந்த;
முடுகின நெறி காணா - விரைந்து  (பறந்து)செல்லுதற்குரிய வழியைக்
காணமாட்டாதனவாய்;  அந்தரின் - குருடரைப்போல; முன்னம்இசை
பாடிய பெடை கண்ணா வருவன பல-
முன்னால் இசைபாடிச் செல்கின்ற
பெண் வண்டைக்கண்ணாகக் கொண்டு வருவன பலவற்றை;  காணாய்-.

     குருடர் ஒலியின் மூலம் வழி அறிந்து சேறல் போல, முன்னால் பெண்
வண்டுகள் பாடும் ஒலிகேட்டுத் தேன் குடித்து மயங்கிக் கண்திறவா ஆண்
வண்டுகள் வழி அறிந்து  சென்றன வாதலின்‘பெடை கண்ணா’ என்றார்.  13

2012.‘கன்னியர் அணி கோலம்
     கற்று அறிகுநர் என்ன,
பொன் அணி நிற வேங்கை
     கோங்குகள், புகு மென் பூ,
அன்ன மென் நடையாய்! நின்
     அளக நல் நுதல் அப்பும்
சின்ன மென் மலர் மானச்
     சிந்துவ பல - காணாய்!

     அன்னம் மென் நடையாய்! - அன்னப் பறவை போன்ற மெல்லிய
நடையை உடையவளே!; பொன் அணி நிற வேங்கை,  கோங்குகள் -
பொன் போன்ற அழகிய நிறம்படைத்த வேங்கைமரமும் கோங்க மரமும்;
கன்னியர் அணிகோலம் கற்று அறிகுநர் என்ன - கன்னிப்பெண்கள்
அணிகின்ற அழகுக் கலையைக் கற்றுப் பழகுபவர்களைப் போல; புது மென்
பூ -
புதிய மென்மையான பூக்களை;  நின் அளக நல் நுதல் அப்பும் -
உன்னுடைய கூந்தலோடு கூடிய நல்ல நெற்றியிலே அப்புகின்ற;  சின்னம்
மென் மலர்மான-
விடு பூக்களாகிய மெல்லியமலரை ஒப்ப; சிந்துவ பல-
சிதறுகின்ற பலவற்றையும்;  காணாய் -.

     கோலம் செய்வாற் நெற்றியில் மலர் அப்புதல் வழக்கு.சின்னம் - விடு
பூ. (உதிரிப் பூக்கள்.) கோங்கு, வேங்கை இரண்டும் பொன்னிறம்  வாய்ந்த
மலர்களை