உடையவை. குழலில் வேங்கையும் கோங்கும் அணிவர் என்பதை, “நின் குழல் வேங்கையம்போதொடு கோங்கம் விராய்” என்பதனுள் (திருக்கோவையார். 205)காண்க. 14 2013. | ‘மணம் கிளர் மலர், வாச மாருதம் வர வீச, கணம் கிளர்தரு கண்ணம், கல்லிடையன, கானத்து’ அணங்கினும் இனியாய்! உன் அணி வட முலை முன்றில் சுணங்கினம் அவை மானத் துறுவன - அவை காணாய்! |
அணங்கினும் இனியாய்! - தெய்வப் பெண்களைக் காட்டிலும் இனியவளே; உன் அணிவடமுலை முன்றில் கணங்கினம் அவை மான - உன்னுடைய முத்துவடம் அணிந்த முலைப் பரப்பில்உள்ள தேமல் திரளைப்போல; வாச மாருதம் வர வீச - வாசனைபொருந்திய தென்றற்காற்றுமிக வீச; மணம் கிளர் மலர் - மனம் மிக்கு விளங்கும் மலர்களின்; கணம்கிளர்தரு கண்ணம் - கூட்டமாக எழும்பிய மகரந்தப் பொடிகள்; கானத்து -காட்டில்; கல் இடையன - பாறைகளின் இடையில் உள்ளனவாய்; துறுவன அவை -நெருக்கமாகச் சிந்திக் கிடப்பனவற்றை; காணாய் -. மகரந்தப் பொடிக்குத் தேமலை உவமை யாக்கினார். முலைப்பரப்பில் தேமல் போலப் பாறைப்பரப்பில் கண்ணம் நெருங்கிக் கிடப்பன என்று கொள்க. 15 2014. | ‘ “அடி இணை பொறைகல்லா” என்றுகொல், அதர் எங்கும், இடை இடை மலர் சிந்தும் இன மரம்? - இவை காணாய்! கொடியினொடு இள வாசக் கொம்புகள், குயிலே! உன் துடி புரை இடை நாணித் துவள்வன - அவை காணாய்! |
குயிலே! - குறில் போன்ற குரல் உடையாளே!; இனமரம் - கூட்டமானமரங்கள்; ‘அடி இணை பொறைகல்லா’ என்று கொல் - (உன்) கால்கள் காட்டு வழியில்நடத்தலைப் பொறுக்கமாட்டா என்று கருதிப் போலும்; அதர் எங்கும் இடை இடை -வழியிடைகளில் எல்லாம்; மலர்களைச் சிதறும்; இவை காணாய் -; கொடியினொடு இள வாசக் கொம்புகள்- கொடிகளோடு இளைய |