| தீ நிகர் தொழில் ஆடைத் திரை பொருவன - பாராய்!’ |
மான் இனம் - மான் கூட்டங்கள்; மயில் மாலை- மயில் வரிசைகள்; குயில் இனம் - குயில் தொகுதிகள்; வதி - சஞ்சரிக்கின்ற; கானம் - இந்தக் காடானது; பூ நனை சினை துன்றி - பூவும் அரும்பும் உடைய கிளைகள்நெருங்கப்பெற்று; நால் நிற நளிர் வல்லிக் கொடி - பலவகை நிறமுள்ள குளிர்ந்தவல்லியென்னும் கொடிகள்; நவை இல பல்கி - குற்றம் இல்லாதன நிரம்பப் பெற்று; தீ நிகர் - நெருப்பை ஒத்த; தொழில் - சித்திரத் தொழில் செய்யப் பெற்ற; ஆடைத் திரை - திரைச் சீலையை; பொருவன - ஒத்திருப்பனவற்றை; பாராய் - பூங்கொடி, பறவை, பன்னிறக் கொடிகள் நிரம்பியிருத்தலின் காடு வண்ண வேலைப்பாடமைந்ததிரைச் சீலையை ஒத்தது என்க. “வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச், சித்திரச்செய்கைப் படா அம் போர்த்ததுவே, ஒப்பத்தோன்றிய உவ வனம்” (மணி. 3:167 -169) என்ற வரிகளை இதனோடு ஒப்புநோக்குக; ‘தீ’ என்பது புத்தி என்னும் பொருள்படும் வடசொல்லாகக்கொண்டு கூறுவார் உளர். அது ‘நிகர்’ என்னும் உவமைச் சொல்லோடு ஏலாமை அறிக. பெரிதும்செந்றிறம் படைத்த கானம் ‘தீ’ நிகர்ந்தது எனலே பொருந்துவதாம். 18 இராமன் சித்திரகூட மலையைச் சீதைக்குக் காட்டுதல் 2017. | என்று, நல் மடவாளோடு இனிதினின் விளையாடி, பொன் திணி திரள் தோளான்; போயினன் நெறி; போதும் சென்றது குடபால்; ‘அத் திரு மலை இது அன்றோ?’ என்றனன்; ‘வினை வென்றோர் மேவு இடம்’ எனலோடும், |
பொன் திணி திரள் தோளான் - பொன் அணிகள் நெருங்கியுள்ள திரண்ட தோளினைஉடையவனாகிய இராமன்; என்று - இவ்வாறு கூறி; நல் மடவானோடு - நல்லசீதையோடு; இனிதினின் விளையாடி - இனிமையாக விளையாடி; நெறி போயினன் -காட்டு வழியில் சென்றான்; (அந் நிலையில்) போதும் - சூரியனம்; குடபால்சென்றது - மேற்குத் திசையை அடைந்தது (மாலை நேரம் வந்தது); ‘வினை வென்றோர் மேவு இடம்’ - வினைகளை வென்ற முனிவர்கள் தங்கியுள்ள இடமாகிய; ‘அத் திருமலை இதுஅன்றோ’ - அந்தச் சித்திரகூட மலை இதுவல்லவா; என்றனன் - என்று (சீதையைப் |