பக்கம் எண் :

432அயோத்தியா காண்டம்

கண்டு;  அகம் மகிழ்ந்து - மன மகிழ்ச்சி அடைந்து;  இறைஞ்சினர் -
வணங்கி; அறிந்து - செய்ய வேண்டிய கடன் முறைகளை உணர்ந்து;
நெடும்புனல் படிந்தார்- மிக்க நீரிலே மூழ்கி எழுந்து;  கிழங்கினோடு
ஊறு மென்களி உண்டு -
கிழங்குடனேசுவை மிகுதியுள்ள மெல்லிய
பழங்களையும் உண்டு; நீர் உண்டார் - தண்ணீர் பருகினர்; ‘ஏறி ஏகுவது
எங்ஙனம்’ என்றலும் -
‘யாற்றைக் கடந்து அக்கரை செல்வது எவ்வாறு?’
என்று இராமன் கூறுதலும்; இளையோன் - இலக்குவன்

     யமுனை யாற்றில் நண்பகல் நீர்மூழ்கி வழிபாடு செய்து உணவு
கொண்டு நீர் உண்டவர்யாற்றைக் கடந்து  அக்கரை செல்வது  எவ்வாறு
என்று சிந்தித்த அளவில் இலக்குவன் பின்வருமாறுசெய்தான் என அடுத்த
பாட்டில் முடியும்.                                             35

இலக்குவன் தெப்பம் அமைத்து இருவரையும் அக்கரை சேர்த்தல்  

2034. வாங்கு வேய்ங் கழை துணித்தனன்;
     மாணையின் கொடியால்,
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து,
     அதன் உம்பரின், உலம்போல்
வீங்கு தோள் அண்ணல்
     தேவியோடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினான், அந்த நெடு நதி,
     இரு கையால் நீந்தி,.

     (இளையோன்) வாங்கு வேய்ங்கழை துணித்தனன் - வளையும்
தன்மையுள்ள மூங்கிற்கழிகளை வெட்டி; மாணையின் கொடியால் -
மானைக் கொடிகளைக் கொண்டு; ஒங்குதெப்பம் ஒன்று அமைத்து -
உயர்ந்த தெப்பம் ஒன்றைக் கட்டி; அதன் உம்பரில் -அதன்மேல்; உலம்
போல் வீங்க தோள் அண்ணல் -
திரண்டு உருண்ட கல்லைப் போலப்
பருத்த தோள்களை உடைய இராமன்; தேவியொடு இனிது வீற்றிருப்ப -
சீதாபிராட்டியுடனேஇனிமையாகத் தங்கியிருப்ப;  அந்த நெடு நதி -
அந்தப் பெரிய யமுனை நதியை; இருகையால் நீந்தி - தன் இரு
கையாலும் நீந்தி;  நீங்கினான் - கடந்தான்.

     தெப்பத்தைத் தள்ள வேண்டும் ஆதலின் இலக்குவன் அது செய்தான்
என்பார் நீந்திக்கடந்தான் என்றார்.                               36

2035.ஆலை பாய் வயல் அயோத்தியர்
     ஆண்தகைக்கு இளையான்
மாலை மால் வரைத் தோள்
     எனும் மந்தரம் திரிய,