| கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உகக் களித்த; |
வறுத்த வித்திய அனையன வல் அயில் பரல்கள் - நெருப்பில் வறுத்து விதைக்கப்பட்டன போன்ற கொடிய கூர்மையான பரற்கற்கள்; பறித்து வித்திய மலர் எனக்குளிர்ந்தன - பிடுங்கி விதைத்த மலர்களைப் போலக் குளிர்ச்சி அடைந்தன; பசைந்த-ஈரம் உடையவாயின; இறுத்து எறிந்தன வல்லிகள் - ஓடிக்கப்பட்டு எறியப்பட்ட கொடிகள்; இளந் தளிர் ஈன்ற - இளமையான தளிரைத் தந்தன; கறுத்த வாள் அரவு -சீறிய கொடிய பாம்பு; எயிற்றினூடு அமுது உகக் களித்த - பற்களின் இடையே இருந்துஅமுதம் சிந்தச் சீற்றம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தன. பரற்கற்கள் மலராக, காய்ந்த கொடிகள் தளிர் ஈன, பாம்பு நஞ்சு தராமல் அழுதம் சித்தஇவ்வாறு பாலை மாறியது என்பதாம். 40 2039. | குழுமி மேகங்கள் குமுறின, குளிர் துளி கொணர்ந்த; முழு வில் வேடரும், முனிவரின் முனிகிலர், உயிரை; தழுவி நின்றன, பசி இல, பகை இல், தணிந்த, உழுவையின் முலை மான் இளங் கன்றுகள் உண்ட; |
மேகங்கள் குழுமிக் குமுறின - மேகங்கள் கூட்டமாய் வந்து சப்தமிட்டு; குளிர்துளி கொணர்ந்த - குளிர்ந்த மழைத்துளியை மண்ணுக்குக் கொண்டு தந்தன; முழுவில்வேடரும் - இலக்கணத்தால் நிரம்பிய வில்லை உடைய வேடர்களும்; முனிவரின் உயிரைமுனிகிலர் - தவத்தோர்களின் உயிரைக் கோபித்துத் தீங்கு செய்தாரில்லை; மான்இளங் கன்றுகள் - மானின் இளைய குட்டிகள்; தழுவி நின்றன. பசி இல, பகை இல தணிந்தஉழுவையின் முலை- தம்மைத் தழுவி நின்றவனாகிய பசியும் பகையும் இல்லாது தணிந்த புலிகளின்முலையை; உண்ட - உண்டன. பகை நீங்கி உயிரினங்கள் நட்பாயின என்பதாம். 41 2040. | கல் அளைக் கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு, அல்லல் உற்றில, அலை புனல் கிடந்தன அனைய; |
|