2042. | காலம் இன்றியும் கனிந்தன கனி; நெடுங் கந்தம், மூலம் இன்றியும் முகிழ்த்தன, நிலன் உற முழுதும்; கோல மங்கையர் ஒத்தன, கொம்பர்கள்; - இன்பச் சீலம் அன்றியும், செய் தவம் வேறும் ஒன்று உளதோ? |
கனி - பழங்கள்; காலம் இன்றியும் - தாம் பழுக்க வேண்டிய காலம் இல்லாத போதும்; கனிந்தன - பழுத்தன; நெடுங் கந்தம் - பெரிய கிழங்குகள்; மூலம் இன்றியும் - தாம் தோன்றுதற்குரிய வேர் இல்லாமலும்; நிலன் உற முழுதும்முகிழ்த்தன - மண்ணில் பொருந்த ழுமுதும் தோன்றின; கொம்பர்கள் -பூங்கொம்புகள்; கோல மங்கையர் ஒத்தன - அழகுடைய பெண்களை ஒத்தவையாய்ப் பூத்துவிளங்கின; இன்பச் சீலம் அன்றியும் செய்தவம் வேறும் ஒன்று உளதோ? - இன்பத்தைத் தருதற்குரிய நல்ஒழுக்கமே அல்லாமல் செய்யக் கூடிய தவம் வேறு ஒன்றும் இருக்கின்றதா? மாலை வெம்மை மாறியதற்குக் காரணம் இராமலக்குவர்களது சீலமே அன்றி வேறில்லை.நல்லொழுக்கம் உடையார்க்கு எல்லாம் வாய்க்கும் என்பது கருத்து. 44 2043. | எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த; வயின் வயின்தொறும், மணி நிறக் கோபங்கள் மலர்ந்த; பயில் மரம்தொறும், பரிந்தன பேடையைப் பயிலும் குயில் இரங்கின; குருந்தம் நின்று அரும்பின முருந்தம். |
எயினர் தங்கு இடம் - வேடர்கள் தங்கும் குறிச்சிகள்; இருடிகள் இருப்பிடம்ஏய்ந்த - தவமுனிவர்களது தவச்சாலையைப் போல ஆயின; வயின் வயின்தொறும் -பக்க இடங்களில் எல்லாம்; மணி நிறக் கோபங்கள் மலர்ந்த - செம்மணி போன்றநிறமுடைய இந்திர கோபப் பூச்சிகள் தோன்றின; பயில் மரம் தொறும் - நெருங்கியுள்ளமரங்களில் எல்லாம்; பரிந்தன பேடையைப் பயிலும் - தம்மைப் பிரிந்து இரங்கினவாயபெண்குயில்களை அழைக்கின்ற; குயில் - ஆண்குயில்கள்; இரங்கின - இரங்கிக்கூவின; குருந்தம் - குருந்த |