பக்கம் எண் :

440அயோத்தியா காண்டம்

9. சித்திரகூடப் படலம்

     சித்திரகூட மலையில் இராமபிரான் தங்கியிருந்து நோன்பு செய்தலைத் தெரிவிக்கும் பகுதிஎன்பது பொருள்.

     இராமன் இலக்குவனோடும் சீதையோடும் சித்திரகூடத்துக்கு வந்து  சேர்கிறான்.சித்திரகூடத்தின் இயற்கை வளங்களைச் சீதைக்குக் கண்டு காட்டி மகிழ்கின்றான். அம்மலையில்உள்ள அருந்தவ வேதியர் இராமனைக் காண வருகிறார்கள்.  அவர்களை வணங்கி அவர்தம் விருந்தினன்ஆகிறான்.  கதிரவன் மறைய,  மாலை நேரம் வருகிறது,  மாலை வழிபாடுகளைச் சீதையோடு இராமன்குடிபுகுகின்றான்.  சாலை அமைத்த இலக்குவனது பேரன்பும் திறமையும் கண்டு  இராமன் மனம்நெகிழ்ந்து  வருந்திப் பாராட்டுகிறான்.  அதற்குப் பதில் கூறுகின்ற இலக்கு வனை இராமன்தேற்றுகிறான்.  சித்திரகூடத்தில் விரதம் ஏற்று  இனிது இருக்கின்றான் என்கின்ற செய்திகள்இப்படலத்துள் கூறப்பெறுகின்றன.

இராமன் சீதைக்குச் சித்திரகூட மலையின் இயற்கை  
அழகுகளைக் காட்டி மகிழ்தல்  

கலிநிலைத்துறை

2046.நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து,
     ஒரு நெறி நின்ற
அனகன், அம் கணன், ஆயிரம்
     பெயருடை அமலன்,
சனகன் மா மடமயிற்கு அந்தச்
     சந்தனம் செறிந்த
கனக மால் வரை இயல்பு எலாம்
     தெரிவுறக் காட்டும்.

     நினையும் - (எல்லாராலும்) நன்கு மதிக்கப்படுகின்ற;  தேவர்க்கும் -
தேவர்களுக்கும்; நமக்கும் - சாமானியர்களாகிய நமக்கும்;  ஒத்து - ஒரு
தன்மைப்பட்டு;  ஒரு நெறி நின்ற - சம நிலையில் நிற்கின்ற; அனகன் -
குற்றம் இல்லாதவனும்;  அம்கணன் - அழகிய (அருளால் நிறைந்த)
கண்களை உடையவனும்;  ஆயிரம் பெயர் உடை அமலன் - ஆயிரம்
திருநாமங்களைப் பெற்றுள்ள இயல்பாகவே பாசங்களில்நீங்கியவனும் ஆகிய
இராமன்;  சனகன் மா மடமயிற்கு -