பக்கம் எண் :

456அயோத்தியா காண்டம்

2070.‘இலவும் இந்திரகோபமும்
     புரை இதழ் இனியோய்!
அலவும் நுண் துளி அருவி நீர்,
     அரம்பையர் ஆட,
கலவை, சாந்து, செங் குங்குமம்,
     கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம்
     கமழ்வன - பாராய்!

     இலவும் - முருக்க மலரும்; இந்திரகோபமும் - இந்திர கோபப்
பூச்சியும்; புரை இதழ் - ஒத்திருக்கின்ற (செந்நிறமான) உதட்டை  உடைய;
இனியோய்! -இனியவளே!;  அலவும் நுண் துளி அருவி நீர் - அலை
வீசி வருகின்ற நுண்ணிய துளி சிதறும்அருவியின் நீரானது;  அரம்பையர்
ஆட -
வானுலக மகளிர் ஆடுகின்ற காரணத்தால்;  கலவை, சாந்து, செங்
குங்குமம்,  கற்பகம், கொடுத்த பலவும் -
வாசனைப் பொருள்கள்,
சந்தனம், சிவந்த குங்குமம், இன்னும் கற்பகமரம் கொடுத்த மணப்பொருள்கள்
பலவும்;  தோய்தலின் - (அருவிநீரில்) தோயப் பெறுதலால்;  பரிமளம்
கமழ்வன -
நறுமணம்வீசப்பெறுகின்றன; பாராய் -.

     அருவிநீர் தன் தன்மை இழந்து அரம்பையர் ஆடிய காரணத்தால்
அவருடம்பில் பூசியிருந்த மணப்பொருள்கள் தம்மிடத்தே கலக்கப்பெற
அதனால் பரிமளம் வீசுகிறது  என்பதனால் தேவருலகத்தைத்தொடும் மலை
உச்சி அருவிகளின் சிறப்பு உரைத்தவாறாம். இந்திர கோபம் - செந்நிறமுள்ள
ஒரு வகைப் பூச்சி, மழைக்காலத்து வரும்  - ‘செம்மூதாய்’ எனவும் பெயர்
கூறுவர்.                                                     25

2071.‘செம் பொனால் செய்து, குலிகம் இட்டு
     எழுதிய செப்பு ஓர்
கொம்பு தாங்கியது எனப் பொலி
     வன முலைக் கொடியே!
அம் பொன் மால் வரை, அலர் கதிர்
     உச்சி சென்று அணுகப்
பைம் பொன் மா முடி மிலைச்சியது
     ஒப்பது - பாராய்!

     செம் பொனால் செய்து - சிவந்த பொன்னால் செய்து; குலிகம்
இட்டு எழுதிய -
சாதிலிங்கக் குழம்பினால் தொய்யிலாகப் படம் வரைந்து
எழுதிய;  செப்பு - சிமிழை; ஓர் கொம்பு தாங்கியது - ஒரு கொம்பு
தாங்குகின்றது;  எனப் பொலி - என்றுசொல்லுமாறு விளங்குகின்ற;
வனமுலைக் கொடியே - அழகிய முலைகளை உடைய