| 2075. | ‘வடுவின் மா வகிர் இவை எனப் பொலிந்த கண் மயிலே! இடுகு கண்ணினர், இடர் உறு மூப்பினர் ஏக, நெடுகு கூனல் வால் நீட்டின, உருகுறு நெஞ்சக் கடுவன், மா தவர்க்கு அரு நெறி காட்டுவ - காணாய்!1 |
இவை மா வடுவின் வகிர் எனப் பொலிந்த கண் மயிலே! - இவை மாம் பிஞ்சுகளின்பிளப்பு என்று சொல்லும்படியாகப் பொலிந்த கண்களை உடைய மயில் போல்பவளே!; இடுகுகண்ணினர் - இடுங்கிப் போன கண்களை உடையவரும்; இடர் உறுநெஞ்சினர் - துன்பம்உறுகின்ற நெஞ்சத்தை உடையவரும் ஆகிய முனிவர்கள்; ஏக- செல்ல; மாதவர்க்கு- அம்முனிவர்களுக்கு; நெடுகு கூனல் வால் நீட்டின - நீண்டு வளைந்த வாலை நீட்டியவையாய்; உருகு உறு நெஞ்சக் கடுவன் - உருகுகின்ற மனம் உடைய ஆண்குரங்கு; அரு நெறிகாட்டுவ - மலையிடத்து அரிய வழியினைக் காட்டுகின்றவற்றை; காணாய். -. மூப்படைந்து, கண் இடுகி, வழியறிந்து செல்ல இயலாது வருந்துகிற மாதவர்களுக்கு மலையில்உள்ள ஆண் குரங்குகள் இரங்கி அன்பு கொண்டு வழிகாட்டிச் செல்கின்றன என்பது சித்திரகூடமலையில் உள்ள உயிரினங்களின் கருணை இயல்பினைக் கூறிய வாறாகும். 30 | 2076. | ‘பாந்தள், தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல்! ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயையக் கூந்தல் மென் மயில் குறுகின நெடுஞ் சிறை கோலி, காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ - காணாய்!1 |
பாந்தன் தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல் - பாம்பின் படமும், தேர்த்தட்டும் என்ற இவை உவமை ஆகாமல் பழிப்பை அடையும்படி அகன்ற பெரிய அல்குலை உடையவளே!; கூந்தல் மென்மயில் - தோகையை உடைய மெல்லிய மயிற்பறவைகள்; குறுகின - அணுகினவாய்; நூல் ஏந்து அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய - பூணூலைத் தாங்கிய அழகியமார்பினை உடைய அந்தணர்களது வேள்விக்குப் பொருந்த; நெடுஞ்சிறை கோலி - நீண்டதம் சிறகுகளை |