பக்கம் எண் :

சித்திரகூடப் படலம் 465

     புலரி போனபின் - சூரியன் மறைந்த பிறகு; மகளிருக்கு ஆனனம்
அளித்ததாமரைப் பூ -
இதுகாறும் பெண்களுக்கு முகத்தைச்
செய்தனவாகிய மலர்ந்த தாமரைப் பூக்கள்;(இப்போது) நனி முகிழ்த்தன -
மிகவும் குவிந்தன;  வான் எனும் மணித்தடம் -வானம் போல உள்ள
அழகிய நீர்நிலையில்; மீன் என விளங்கிய - நட்சத்திரம் போல விளங்கிய;
வெள்ளி ஆம்பல் வீ - வெண்ணிறம் உள்ள ஆம்பல் மலர்கள்; எங்கும்
மலர்ந்த -
எவ்விடத்தும் மலர்ந்தன.

     மலர்ந்த தாமரை பெண்கள் முகம் போலும் ஆதலின், மலர்ந்த தாமரை
என்று சொல்வார்‘மகளிருக்கு ஆனனம் அளித்த தாமரை’ என்றார். இரவில்
தாமரை குவிதலும் ஆம்பல் மலர்தலும்இயல்பு.                      40

2086.மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின;
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின;
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின;
அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான்.

     மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின - (இரவு நேரம் வருதலின்
ஏறி உறங்க)பெண் குரங்கும் ஆண் குரங்கும் மரங்களைப் பார்த்தன;
தந்தியும் பிடிகளும் தடங்கள்நோக்கின - ஆண் யானையும் பெண்
யானையும் தம் இருப்பிடத்துக்குச் சென்று  சேரும்வழிகளைப் பார்த்தன;
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின- பழிப்பு இல்லாதபறவைகள்
தம் கூடுகள் உள்ள நீண்ட வழியைப் பார்த்தன; அறிவை நோக்கினான் -
மெய்ப்பொருளை நோக்கி அறிதற்கு உரிய இராமன்; அந்தியை
நோக்கினான்
- மாலைக்காலத்தில் செய்தற்கு உரிய கடமைகளைச்
செய்யத் தொடங்கினன்.

     குரங்குகள் இரவில் மரத்தின்கண் உறங்கல் இயல்பு;  பறவைகள் தம்
கூட்டை அடைதலும், யானைமுதலியன தம் இருப்பிடத்தை நாடிச் சேறலும்
மாலை நேரத்தில் நிகழ்வன.  தடம் -வழி.                          41

இராமன் முதலிய மூவரும் மாலை வழிபாடு செய்தல்  

2087. மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில;
மை அரு நறு மலர் மலர்ந்தவாம் சில;
ஐயனோடு, இளவற்கும் அமுதனாளுக்கும்
கைகளும், கண்களும், கமலம் போன்றவே.

     மொய் உறு நறு மலர் சில முகிழ்த்தவாம்- (மாலையில்) நெருங்கிப்
பொருந்தியமணமுள்ள மலர்கள் சில குவிந்தன; மை அறு நறு மலர் சில
மலர்ந்தவாம்-
குற்றமற்றமணமுள்ள மலர்கள் சில மலர்ந்தன; ஐயனோடு-
இராமனோடு;  இளவற்கும் - இலக்குவனுக்கும்;