மயிலுடைப் பீலியின் மேல் விதானம் வகுத்து - மயிலின் தோகை கொண்டு மேல்கட்டியைச் செய்தமைத்து; அயில் உடைச் கரிகையால் - கூர்மை உடைய வாளால்; அருகுதூக்கு அறுத்து - பக்கங்களிலே தொங்கல் தொங்கவிட்டு; எயில் - மதிலை; இளங்கழைகளால் இயற்றி - இளைய மூங்கில்களால் செய்தமைத்து; ஆறு இடு செயல் உடைப்புதுமலர் பொற்பச் சிந்தி - ஆற்றின் அருகே இருந்து கொணர்ந்த நல்ல புதிய மலர்களை அழகுறஅங்கங்கே சிதறி. மகளிர் இருக்கும் இடம் ஆதலின் மயில் தோகையால் விதானம் அமைத்தான். பக்கங்களில்மாலைகளைத் தொங்க விடுதல் அழகு நோக்கி. ஏகாரம் ஈற்றசை. 47 இராமன் சாலையில் சீதையோடு குடி புகுதல் 2093. | இன்னணம் இளையவன் இழைத்த சாலையில், பொன் நிறத் திருவொடும் குடி புக்கான் அரோ! - நல் நெடுந் திசைமுகன் அகத்தும், நம்மனோர்க்கு உன்ன அரும் உயிருளும், ஒக்க வைகுவான். |
இன்னணம் - இவ்வாறு; இளையவன் இழைத்த சாலையில் - இலக்குவன் செய்துஅமைத்த சாலையில்; நல் நெடும் திசை முகன் அகத்தும் - நல்ல பெரிய பிரமதேவனதுநெஞ்சத்திடத்தும்; நம்மனோர்க்கு - நம்மை ஒத்தவர்களுக்கு; உன்ன அரும்உயிருளும் - நினைத்தற்கரிய உயிரினுக்குள்ளும்; ஒப்ப - ஒரு தன்மையாக; வைகுவான்- என்றும் நீங்காது உடன் உறைகின்ற பரம்பொருளாகிய இராமன்; பொன்நிறத்திருவொடும் குடி புக்கான் - பொன்னிறம் படைத்த இலக்குமியின் அவதாரம் ஆகியசீதையோடும் குடி புகுந்தான். பிரமன் நெஞ்சிலும், உயிரிலும் உறைபவன் இச் சிறிய சாலையில் அவதார நிமித்தம் குடிபுகுந்தான் என்றது அரியனாய் எளியனாம் அவனது சௌலப்பயத்தைக் காட்டியது. ‘அரோ’அசை. 48 இராமன் சாலையில் உவந்திருத்தல் 2094. | மாயம் நீங்கிய, சிந்தனை, மா மறை, தூய பாற்கடல், வைகுந்தம், சொல்லல் ஆம் ஆய சாலை, அரும் பெறல் அன்பினன், நேய நெஞ்சின் விரும்பி, நிரம்பினான். |
மாயம் நீங்கிய சிந்தனை - உலக மாயையிலிருந்து விடுபட்ட ஞானிகளது தெளிந்தமனம்; மா மறை - பெரிய வேதம்; தூய பாற்கடல்- (வியூகத்தில் தான்எழுந்தருளி இருப்பதாகிய) தூய்மையான |