பக்கம் எண் :

சித்திரகூடப் படலம் 469

திருப்பாற்கடல்; வைகுந்தம் - (நித்ய சூரிகள் என்றும் வாழ்வுக்கும்
இருப்பாகிய)வைகுந்தம்; என்று சொல்லல் ஆம் ஆய - என்று
சொல்லுதற்குப் பொருந்தியதாகிய; சாலை - சாலைக்கண்; அரும் பெறல்
அன்பினன் -
பெறலரும் அன்புடையனாகியஇராமபிரான்; நேய
நெஞ்சின்
- தனது  அன்புள்ளத்தால்;  விரும்பி -மகிழ்ச்சி அடைந்து;
நிரம்பினான் - நிறைவடைந்தான்.

     இராமன் குடிபுகுந்த காரணத்தால் திருமாலாகிய பரம் பொருள்
வீற்றிருக்கும் இடங்களாக அச்சாலை ஆகியது.                     49

சாலை அமைத்த இலக்குவனை நினைந்து இராமன் நெகிழ்ந்து கூறுதல்  

2095.மேவு கானம், மதிலையர்கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன;
தா இல் எம்பி கை சாலை சமைத்தன-
யாவை, யாதும் இலார்க்கு இயையாதவே?

     மிதிலையர் கோன் மகள் - மிதிலா நகரத்து அரசனாகிய சனகன்
மகளாகியசீதையின்; பூவின் மெல்லிய பாதமும் - பூவைக் காட்டிலும் மிக
மெல்லியவாகியபாதங்களும்; மேவு கானம் போந்தன - கொடிய காட்டில்
நடந்து  வந்தன; தா இல்எம்பி கை - குற்றம் அற்ற என் தம்பியின்
கைகள்; சாலை சமைத்தன - குடிலைஅமைத்துத்  தந்தன; யாதும்
இல்லார்க்கு -
எந்தத் துணையும்  இல்லாதவர்களுக்கு;  இயையாத -
வந்து  சேராதன;  யாவை - எவை (ஒன்றும் இல்லை.)

     ‘பாதமும்’ என்ற  உம்மை சிறப்பும்மை;  மென்மைத் தன்மையை
நோக்கியது. பொதுப்பொருள்குறித்த இறுதி அடியமடால் இது
வேற்றுப்பொருள் வைப்பணியாம். ‘ஏ’ காரம் ஈற்றசை.                50

2096.என்று சிந்தித்து, இளையவற் பார்த்து, ‘இரு
குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ இதுபோல்?’ என்றான் -
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்.

     என்று சிந்தித்து- என்று இவ்வாறு நினைத்து; இளையவற் பார்த்து-
இலக்குவனைப் பார்த்து; ‘இரு குன்று போலக் குவவிய தோளினாய்! -
இரு மலைகளைப்போலப் பொருந்திய தோள்களை உடையவனே!; நீ இது
போல் என்று கற்றனை? -
நீஇவ்வாறு குடில் அமைப்பதற்கு எப்பொழுது
கற்றுக் கொண்டாய்?;’ என்றான் - என்றுகேட்டவனாய்; துன்று தாமரைக்
கண் பனி சோர்கின்றான் -
நெருங்கிய தாமரை போலும்கண்கள் நீர்
சிந்தப் பெறுகின்றவனாக ஆனான்.