பக்கம் எண் :

சித்திரகூடப் படலம் 471

     இராமன் வருந்திக் கூறியது கேட்ட இலக்குவன் ‘நீ மூத்தவனாகப்
பிறந்ததனாலேயே வனவாசமாகிய துன்பத்தை அனுபவிக்க வேண்டியவனாக
ஆகிவிட, உனக்குப் பணிவிடை செய்வதில் உவப்பாய் இருக்கும் எனக்குத்
துன்பம் இழைத்ததாக நீ சொல்வது சரியாகுமா?’ என்று கேட்பது போல
இலக்குவன் மறுமொழி கூறினான். ‘எனக்கு இது மகிழ்ச்சி தருவது’ உன்
துன்பமே பெரிது’ என்றானாம். இனி, இவ்வாறன்றி ‘உன்னால் எனக்குத்
துன்பம் பெரிது உண்டாகவில்லை; துன்பத்துக்கு முளை முன்னாலேயே
கைகேயியாகிய என் தாய் பெற்ற வரத்தால் வந்து தோன்றிவிட்டது
அல்லவா? இதனால் நீ நெடுநாள் எனக்குத் துன்பம் இழைத்ததாகக் கருதி
வருந்துதல் சரியன்று’ என்றானாகக் கூறுதல் பொருந்தும். ஆயினும், அது
இலக்குவன் தான் துன்பம் உறுவதாகக் கூறுவதாகப் பொருள் படும்.
ஆதலின், பொருந்துமாறு அறிக. பொதுவாக இத்துன்பத்துக்கெல்லாம்
காரணம் நின்னால் ஆகியதன்று; முன்னரே தயரதன் கைகேயிக்கு வரம்
தந்ததனால் உண்டாகியதே. இதற்கு நீ வருந்துதல் தகாது’ என்றானாகவும்
கூறலாம்.                                                     53

இலக்குவனுக்கு இராமன் ஆறுதல் கூறல்  

2099.‘ஆக, செய்தக்கது இல்லை’ அறத்தினின்று
ஏகல் என்பது அரிது’ என்றும் எண்ணினான்
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
‘சோக பங்கம் துடைப்பு அரிதால்’ எனா,

     ஆக - அப்படியே இருக்கட்டும்; செய்தக்கது இல்லை -
(துன்பத்துக்குப்பரிகாரமாகச்) செய்யக்கூடியது எதுவும் இல்லை;
அறத்தினின்று ஏகல் என்பது அரிது -தருமத்திலிருந்து விலகிச்
செல்வது  என்பது  நம் போன்றார்க்கு இயலாது;  என்று எண்ணினான்-
என்று தன் மனத்தில் (இராமன்) கருதினான்;  ஓகை கொண்டவன் -
(தனக்குத்தொண்டு செய்தலில்) மகிழ்ச்சி கொண்ட இலக்குவனின்; உள்
இடர் -
மனத்துன்பத்தை;நோக்கினான் - பார்த்து; சோக பங்கம் - இவ்
இளையவனது துன்பத்தால்ஏற்பட்ட மனச் சோர்வு; துடைப்பு அரிதால்’ -
போக்குவது  இயலாது;  எனா -என்று  கருதி.

     ‘ஆக’ என்பது உரையசை. ‘ஆல்’ அசை.                      54

2100.பின்னும், தம்பியை நோக்கி, பெரியவன்,
‘மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு’ இதற்கு
என்ன கேடு உண்டு? இவ் எல்லை இல் இன்பத்தை
உன்னு, மேல் வரும் ஊதியத்தோடு’ என்றான்.

     பெரியவன் - இராமன்; பின்னும் - மறுபடியும்; தம்பியை நோக்கி-
இலக்குவனைப் பார்த்து; ‘மன்னும் செல்வத்திற்கு - (உலகில்) பெறும்
பொருட்செல்வத்திற்கு; வரம்பு உண்டு - இவ் வளவு என்று ஒரு எல்லை
உண்டு; இதற்கு -இந்த வனவாசத் தவம்