அவர்- அத் தூதுவா; ‘வலியன்’ என்று கூற- (தயரதன்) நலமாக உள்ளான் என்று கூற;மகிழ்ந்தனன்- (அது கேட்டுப் பரதன்) மகிழ்ச்சி அடைந்தான்; (பின்னர்ப் பரதன்)‘எம்பிரானொடும்- எம் தலைவனாகிய இராமபிரானொடும்’ இலைகொள் பூண் இளங்கோன் -இலைத்தொழிலாற் சிறப்புற்ற அணிகளை அணிந்த இளைய பெருமாளாகிய இலக்குவன்; உலைவு இல்செல்வத்தனோ’- தளர்ச்சியும் தடுமாற்றமும் இல்லாத செல்வம் உடையவனாய் இருக்கின்றானோஎன்று கேட்க; ‘உண்டு’ என- (அத் தூதுவர் அங்ஙனமே அவர்களும் குறையின்றி) நலமாய்இருக்கின்றார்கள் என்று கூறு; தாழ்தடக் கைகள்- தாள் அளவாக நீண்ட கைகளை; தலையில்ஏந்தினன்- (இராம லக்குவர்கள் உள்ள திசை நோக்கிப் பரதன்) தலைமேல் வைத்து வணங்கினான். ‘வலியன்’ என்றது நிகழ்வை நோக்கப் பொய்தான்; எனினும் யாதொன்றும் தீமை இலாதசொல்லும் வாய்மை என உணர்க. இராமனை உடன் காத்து இணைபிரியாது இருத்தலின் ‘இளங்கோனை’முதலிற் கூறினார். ‘ஓடு’ உருபு இங்கே உயர்ந்த இராமன் மேல் வந்தது; “ஒருவினை ஒடுச்சொல்உயர்பின் வழித்தே” என்பவாகலின். (தொல். சொல். வேற். மயங். 8) மனக்குறைவும், உடல்தளர்வும் இல்லாமல் இருப்பதே செல்வம் ஆகும். “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” (குமர -திரட்டு - 475) ‘நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பவாதலின், ‘உலையில் செல்வத்தனோ’ என்பதனுள் எல்லாம் விசாரித்தானாக ஆயிற்று. முன் பாட்டிற்போல் ‘இராமன்அரகச் செல்வத்தைப் பெற்றுத் தற்போது இழந்துள்ளான்’ என்பது பரதன் சொல்வழிஅவனையறியாமலே வந்ததை ‘உலைவு இல் செல்வத்தனோ’ என்பது குறிப்பிடும். இது குறிப்புமொழி. தூதுவர் திருமுகம் கொடுத்தல் 2105. | மற்றும் சுற்றத் துளார்க்கும் வரன்முறை உற்ற தன்மை வினாவி உவந்தபின், ‘இற்றது ஆகும், எழுது அரு மேனியாய்! கொற்றவன்தன் திருமுகம் கொள்க’ என்றார். |
மற்றும்- அதன்மேலும்; சுற்றத்து உள்ளார்க்கும்- உறவின் முறையின் உள்ளவர்களுக்கும்; வரல் முறை- (கேட்க வேண்டிய) மரபு முறைப்படி; உற்ற தன்மை- நிகழ்ந்துள்ள நன்மைகளை; வினாவி விசாரித்து (அறிந்து); உவந்த பின்- (பரதன்) மகிழ்ச்சி அடைந்த பிறகு; ‘எழுதுஅரு மேனியாய்- (அத் தூதுவர்) ஓவியத்தில் எழுதுதற்கு இயலாத அழகிய திருமேனியை உடைய பரதனே!; கொற்றவன் தன்- மன்னனுடைய; திருமுகம்-; இற்றது ஆகும்- இத் தன்மையுடையது ஆகும்; கொள்க’- இதனைப் பெற்றுக்கொள்க; என்றார் - முன்னர் விசாரிக்கப்படுபவர், பின்னர் விசாரிக்கப்படுபவர் என்றும், இன்னாரைஇவ்வாறு விசாரித்தல் வேண்டும். என்றும் உலக வழக்கில் உள்ள |