முறைப்படி விசாரித்தலை ‘வரல் முறை’ என்றார். இத் தூதுவர் ஓலை கொடுத்து நிற்பார் என்னும் வகையைச் சார்ந்த தூதுவர். தான் வகுத்துக் கூறுவான். கூறியது கூறுவான், ஓலை கொடுத்து நிற்பான் என்னும் மூவகையினர் தூதுவர் இவரை முறையே தலை, இடை, கடை என வழங்கல் நூல் வழக்கு. (குறள். பரி. உரை. 687) 4 பரதன் திருமுகம் பெற்று மகிழ்தல் 2106. | என்று கூறலும், ஏத்தி இறைஞ்சினான், பொன் திணிந்த பொரு இல் தடக் கையால், நின்று வாங்கி, உருகிய நெஞ்சினான் துன்று நாள்மலர்ச் சென்னியில் சூடினான். | என்று கூறலும்- என்று தூதுவர் கூறிய உடனே; ஏத்தி- (பரதன் அத் திருமுகத்தக்)கொண்டாடி வணங்கி; பொன் திணிந்த பொரு இல் தடக்கையால்- பொன்னாற் செய்த அணிகளைஅணிந்த ஒப்பற்ற நீண்ட கைகளால்; நின்று- எழுந்து நின்று; வாங்கி- வாங்கிக்கொண்டு;உருகிய நெஞ்சினான்- (அன்பினால்) கரைந்த மனம் உடையனாய்; நாள் மலர் துன்று சென்னியில்- அன்றவர்ந்த மலர்கள் நெருங்கச் சூடப்பெற்ற தன்தலை மீது; சூடினான்- (அத்திருமுகத்தை)அணிந்துகொண்டான். பொன்னாற் செய்த அணி நெருக்கமாகச் கைகளில் இருத்தலின் கையைப் ‘பொன் திணிந்த’என்றார், ஏத்துதல், நின்று வாங்குதல், தலைமேற் கொள்ளுதல் பரதன் அன்பையும், மன்னன்சார்பில் வந்த திருமுகத்தின் பால் காட்டும் மதிப்பையும் காட்டும். 5 திருமுகம் கொணர்ந்த தூதர்க்குப் பரதன் பரிசு அளித்தல் 217. | சூடி, சந்தனம் தோய்த்துடைச் சுற்று மண் மூடு தோட்டின் முடங்கல் நிமிர்த்தனன்; ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்குக் கோடி மேலும் நிதியம் கொடுத்தனன்.1 | சூடி- (திருமுகத்தைத்) தலையிற் சூடிய பின்னர்; சந்தனம் தோய்த்து- (மேலே) சந்தனம்பூசி; சுற்று மண் மூடு உடை- சுருட்டப்பெற்று அரக்குமண் வைத்து (முத்திரை இட்டு) மூடுதல் உடைய; தோட்டின் முடங்கல்- பனை ஓலையால் ஆகிய கடிதத்தை; நிமிர்த்தனன்- நீட்டிப் (பிரித்து)பார்த்தான்; ஈடு- (அத் திரு முகத்தில்) இடப்பெற்ற செய்தியை; நோக்கி- பார்த்து(வாசித்து); வந்து எய்திய தூதர்க்கு- (அத் திருமுகத்தை) கொண்டு வந்து தன்னைச் சந்தித்து தூதுவர்க்கு; கோடி மேலும் நிதியம்- கோடி |